சீர்காழி, ஜூன் 1- நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் வழக்கம் போல் பதிவு செய் யப்பட்டவர்களுக்கு ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வேலை நடைபெறுவது நிறுத்தப்பட்டி ருந்தது. இந்நிலையில் ஊர டங்கு தளர்வால் இத்திட்டத் தில் வேலையில் ஈடுபடுவ தற்கு கொள்ளிடம் ஒன்றி யத்தில் உள்ள 42 ஊராட்சி களில் உள்ள 200 கிராமங்க ளைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து வேலையில் ஈடுபடுவதற்கு பணி கேட்டு அந்தந்த ஊராட்சி மூலம் விண்ணப் பித்திருந்தனர். அதனடிப்படையில் விண்ணப்பித்த 3200 பேருக் கும் கடந்த ஏப்ரல் மாதமே புதிதாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தின் மூலம் வழங்கப் பட்டது. இந்நிலையில் பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி யில் புதிய 100 நாள் அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தி ருந்த விவசாய தொழிலா ளர்களுக்கு 100 நாள் அட்டை வழங்காததால் அப்பகுதி மக்கள் வேலையின்றி குடும்பம் நடத்துவதற்கு மிக வும் சிரமப்பட்டு வருகிறார் கள். உடனடியாக நூறு நாள் அட்டை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.