தரங்கம்பாடி, அக்.22- நாகை ஒக்கூர் என்பிபிஎல் மின் உற் பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் அட்வான்ஸ் தொகையை இதுவரை தராததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு), தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நிறு வனத்தின் முன்பு செவ்வாயன்று உண் ணாவிரதம் நடைபெற்றது. உண்ணா விரதத்துக்கு தொமுச அமைப்பு சாரா சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணை தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வீ. மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநி லத் துணை தலைவர் ராஜாராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட தலைவர் ஜீவா, பொருளாளர் ரவீந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சிவ ராஜன், திட்ட செயலாளர் எம்.கலைச் செல்வன், சிஐடியு சங்கத்தை சேர்ந்த அண்ணாத்துரை, சிந்தனையழகன், மோகன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதுவரை நிறுவனம் சார்பில் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரா ததால் புதனன்று மீன்டும் உண்ணா விரதத்தை தொடர உள்ளதாக இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்போராட்டத் தில் ஏராளமான தொழிலாளர்கள் குடும் பத்துடன் கலந்து கொண்டனர்.