tamilnadu

img

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.22- நாகை மாவட்டம் செம்பனார்கோயி லில் மக்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நாம் மக்கள் இயக்கத் தின் தலைவர் சங்கமித்திரன் தலைமை வகித்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அன்புச் செல்வன், அப்பர் சுந்தரம், காவிரி குழு மத்தின் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அகஸ்டின் விஜய், துட ரிப்பேட்டை கருணாநிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் நிர்வாகிகள் உரையாற்றினர். உடனடியாக மயி லாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென கோரிக்கை முழக் கமிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.