tamilnadu

img

பயிர் காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி, செப்.3- நாகை மாவட்டம் திருக்கடையூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் கிளை செயலாளர்கள் ஜீவானந்தம், பரம சிவம் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. திருக்கடையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1875 விவசாயி கள் 2017-18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த  நிலையில் 1804 விவ சாயிகளுக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. காழியப்பநல்லூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 71 விவசாயி களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கா ததை கண்டித்து பல்வேறு போராட்டங் களை தொடர்ந்து நடத்தியும் இது வரை காப்பீட்டுத் தொகை வழங்காத தால் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை வட்ட செயலாளர் பி. சீனிவாசன் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், இராசையன், ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் கோவிந்த சாமி, ஜி.இளையராஜா, கிளை செய லாளர்கள் செல்வம், கணேசன் ஆகி யோர் உரையாற்றினர். உடனடியாக 71 விவசாயிகளுக்கு சேர வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வில்லை எனில் மீண்டும் போராட் டத்தை தொடருவோம் என தெரி வித்தனர். மாலை வரை தொடர்ந்த போராட்டத்தை கட்சியின் மாவட்ட செய லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான நாகை மாலி முடித்து வைத் தார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏரா ளமானோர் போராட்டத்தில் பங்கேற்ற னர்.