தரங்கம்பாடி, ஏப்.25 -நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த15 இளைஞர்கள் ஒன்றுகூடி பொன் பரப்பி சம்பவம் குறித்து ஒரு பிரிவினரை தவறாக பேசி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டனர். இது சம்பந்தமாக ஒரு நபர் அளித்தபுகாரின் அடிப்படையில் செவ்வாயன்று தலித் சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களில் நுழைந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள், இதில் சம்பந்தப்பட்ட 9 இளைஞர்களை கடுமையாகதாக்கி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 இளைஞர்களை தேடிவரும் நிலையில் நாள்தோறும் நள்ளிரவில் தலித் சமூகத்தினர் கிராமங்களுக்குள் நுழைந்து தூங்கும் மக்களை மிரட்டி வருகின்றனர்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், ஒரு பிரிவுசமூகத்தை தவறாக பேசியது கடும்கண்டனத்திற்குரியது. தலித் கிராமங்களுக்குள் நாள்தோறும் காவல் படையுடன் சென்று மக்களை மிரட்டுவதை ஏற்க முடியாது. விடுமுறைக் காலம்என்பதால் வழக்கமாய் வந்து செல்லும்உறவினர்கள் கூட வர தயங்குவதாகவும், ஊரின் எல்லையில் ஏராளமான காவலர்கள் இருப்பதால் மக்கள் நிம்மதியாக அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். அமைதியை ஏற்படுத்த வேண்டிய காவல்துறையே சீர்குலைக்கும் விதமாக செயல்படுவதை தவிர்ப்பதோடு, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து அத்துமீறும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றார்.