சீர்காழி:
சீர்காழி அருகே நெப்பத்தூர் செங்கல் சூளையில் லோடுமேன் வேலை பார்த்தவர் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து சூளை உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து ஐந்தாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.சீர்காழி அருகே திருவாலி நிம்மேலிநடுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவருக்கு மனோன்மணி (36) மனைவியும், பிரியதர்ஷினி (14), பிரியங்கா (10), ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும், பிரதீப் (12) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் நெப்பத்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சம்பளம் பாக்கியை கேட்டதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் 17/04/2021 விடியல்காலை மூன்று மணிக்கு செங்கல் சூளையிலிருந்து போன் வந்ததாக மனைவியிடம் கூறிவிட்டு செங்கல் சூளைக்கு சென்றவர் சூளையில்அமைக்கப்பட்டிருந்த தகரகொட்ட கையில் அடித்து தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
மறியல்
இதனை அறிந்த உறவினர்கள் சீனிவாசனை கொலை செய்துவிட்டார்கள் என்று கூறி செங்கல் சூளையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி.ஸ்ரீ நாதா, சீர்காழிவருவாய் கோட்டாட்சியர் நாராயணன்,சீர்காழி தாசில்தார் ஹரிதரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலை செய்த செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்தால்தான்உடலை எடுத்துச் செல்ல அனுமதிப் போம் எனக்கூறி தொடர்ந்து மறியலில்ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவெண்காடு போலீசார் சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி செங்கல் சூளை உரிமையாளர் சுரேஷ் ஜெயின், சித்தார்த், மோகன்ராஜ் ஆகியோர் மீது 306, 352, இபிகோ 3(1)(6), 3(2)(6), 3(1)(எஸ்),.எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இறந்து போன சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போதுஇறந்தவர் சார்பில் வீடியோ பதிவு செய்யவேண்டும், இறந்தவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர், பிரேத பரிசோதனை செய்யநடுநிலையான மூன்று மருத்துவர்கள் வேண்டுமென்று கோரிக்கை வைத்துஏப். 20 அன்று காலை 11 மணி அளவில்4-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் பா.ரவிச்சந்திரன் முன்னிலையிலும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
உடல்கூறாய்வுக்கு முன்பார்வையிட அனுமதி
அதனைத் தொடர்ந்து அன்று மாலை 4 மணி அளவில் சீனிவாசனின் உடற் கூராய்வு கோட்டாட்சியர் நாராயணன், தலைமையில் நடைபெறுவதற்கு முன்புஇறந்துபோன சீனிவாசன் உடலில்உள்ள அடிபட்ட காயங்களை உறுதிப் படுத்தவும், அடையாளப்படுத்தவும் சீனிவாசனின் மனைவி மற்றும் வழக்கறிஞர், போராட்டக் குழுவில் உள்ள ஏழுபேர் அனுமதி பெற்று உள்ளே சென்றுவந்து பேட்டி அளித்தனர்.
எலும்பு முறிவுகள், காயங்கள்
அப்போது அவர்கள் கூறியது: சீனிவாசனின் வலது கால் தொடையில் 3 அங்குலம் அளவிற்கு கிழிந்த காயம் உள்ளது. இடது கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. வலது கால் முட்டி முறிவுஏற்பட்டுள்ளது. காதில் ரத்தம் ஒழுகிய நிலையில் உள்ளது. ஆணுறுப்பில் பெரிய வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. வலது தோள்பட்டையில் அடித்த காயம்உள்ளது. மார்பின் இடது புறம் அடித்த காயம் உள்ளது. கழுத்தின் பின்பக்கம் தண்டுவடத்தில் காயம் உள்ளது. முகத்தில் அடித்த காயம் உள்ளது. மூக்கில் ரத்தக்கசிவு உள்ளது என்றும் கூறினர்.
அதன் பின்னர் ஆடியோ மற்றும் டிஎஸ்பி-யிடம் முதல் தகவல் அறிக்கையில் கொலை வழக்கு பதிவு செய்து தருமாறு கேட்டனர். ஆனால்,கொலை வழக்கு (302) பதிய மறுத்ததால் சீனிவாசனின் உடலை வாங்க மறுத்தனர். மறுநாள் கொலை வழக்கு (302) பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பி ஏப்.21 (புதன்கிழமை) காலை பதினோரு மணி அளவில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ்.துரைராஜ், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஏ.வி. சிங்காரவேலன், பி.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், கே.கேசவன், டி.துரைக்கண்ணு. மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் சி.மேகநாதன், தரங்கை ஒன்றியச்செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாதர் சங்க மாவட்ட தலைவர் பி. என். ராஜலட்சுமி, சீர்காழி ஒன்றிய செயலாளர் கே. அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே. ஜெகதீசன வழக்கறிஞர் எஸ்.ஞானப்பிரகாசம், வழக்கறிஞர் கார்த்திக், எஸ். இளங்கோவன், பிரபாகரன் புளியந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜி உள்ளிட்டோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மண்டலச் செயலாளர் வேலு. குணவேந்தன், மாநிலதுணை செயலாளர் ரியாஸ் கான், சீர்காழிசட்டமன்றத் தொகுதி செயலாளர் தாமும்இனியவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ம.தேவா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜ்குமார், வைத்தியநாதன், மற்றும் பல்வேறு அமைப்புகள் கூடி கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.