சீர்காழி, மே 16- நாகை மாவட்டம் சீர்காழி- கொள்ளிடம் பகுதியில் 80 ஊராட்சிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு சுகாதாரத் துறை சார்பில் அவர்களின் மருத்துவ செலவுக்கு மாதந் தோறும் ரூ 1000 வீதம் வழங் கப்பட்டு வருகிறது. நோய் வாய்ப்பட்ட உடலால் உழைக்க முடியாதவர்க ளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாத காலமாக உத வித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இத னால் உதவித்தொகை பெற்று வந்த நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே அரசு உடனடியாக உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.