சீர்காழி, மே 30-கொள்ளிடம் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் மாத உதவித்தொகை 6 மாதமாக வராததால் நோயாளிகள் அவதியடைந்து வரு கின்றனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 300 பயனாளிகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000வீதம் மாத உதவித் தொகையாக பெற்று வருகின்றனர். ஏழை எளிய உடல் உழைப்பில் ஈடுபட முடியாதவர்களுக்கு அரசின் சார்பில் இந்த நிதி உதவி வங்கியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் மாத முதல் வாரத்திற்குள் உதவித் தொகை அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாத மாக இந்த உதவித்தொகை பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால்அவர்கள் மாதந்தோறும் வங்கி களுக்குச் சென்று ஏமாந்து திரும்பு கின்றனர். மாத்திரை, மருந்து வாங்கவும், இதர செலவுகளுக்கும் கையில் காசு இல்லாமல் வேதனை அடைந்துள்ளனர். எனவே நோயாளிகளின் வேதனை யையும், தவிப்பையும் போக்கும் வகையில் உதவித் தொகையை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.