tamilnadu

வருடந்தோறும் வலசை வரும் 200 பறவை இனங்கள் பெரம்பூரை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க மக்கள் கோரிக்கை

சீர்காழி, ஜன.23- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் கிராமம் உள் ளது. இக்கிராமத்தில் சுமார் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கின்றனர். பெரம்பூர் மெயின் ரோட்டை ஒட்டியுள்ள வேம்பு, புளியமரம், பூவரசுமரம், ஒதியமரம், கொன்றை உள்ளிட்ட மரங்களில் வருடந்தோறும் வலசை வரும் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கிச் செல்கின்றன.     வருடந்தோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் பறவை இனங்கள் மரங்களில் தங்கி கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இங்கு வரும் பற வைகளில் சில வேடந்தாங்கல் சர ணாலயத்திலிருந்தும் வருகின் றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கூழைக்கடாய், கரண்டி, மூக்கன், நத்தக்கொத்தி நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட 50 வகை பற வைகளும் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. அனைத்து வகை பறவைகளும் ஒரே நேரத்தில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு கள் பொறிக்கின்றன. குஞ்சுகள் பறக்கும் தருவாயில் மார்ச் மாதம் தங்கள் தாயகம் செல்கின்றன. பின்னர் மீண்டும் அக்டோபர் மாதம் அவை வருகின்றன. இதனால் தீபாவளி பண்டிகை யின் போது இப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் பறவை களை பாதுகாத்து அரவணைக் கின்றனர். பட்டாசுகள் வெடிப்ப தில்லை என்ற முடிவும் எடுத்துள்ள னர். பறவைகளை யாராவது வேட்டையாட வந்தால் அவர் களை எச்சரித்து அனுப்புகின்ற னர்.  மாவட்டத்தின் கடைகோடி யில் உள்ள பெரம்பூர் கிரா மத்திற்கு வந்து செல்லும் பறவை யினங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து காணப்படு கிறது. அதனால் புதிதாக மரக் கன்றுகளை நட்டு பராமரித்து பறவைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். இப்பகுதி யை பறவைகள் சரணாலயமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.