மும்பை:
என்டிடிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய்ஆகிய இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று சென்றனர். அப்போது, சிபிஐ கொடுத்த நோட்டீசின் அடிப்படையில், பிரணாய் ராய் தம்பதியைதடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் அவர் களது பயணம் ரத்து செய்யப்பட்டது.‘ஐசிஐசிஐ’ வங்கிக் கடன் தொடர்பாக, பிரணாய் ராய், ராதிகா ராய் மீது 2017-ஆம்ஆண்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்நிலையில், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடக்கூடாதுஎன்ற முன்னெச்சரிக்கை அடிப்படையிலேயே, தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் பண மதிப்புநீக்கம், ஜிஎஸ்டி, காஷ்மீருக்கான சிறப்புஉரிமைகள் ரத்து ஆகிய நடவடிக்கைகளை ‘என்டிடிவி’ தொடர்ந்து விமர்சித்து வருவதன் காரணமாக, பழிவாங்கும் நோக்கத்தின்அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இது ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், சிபிஐ-யின் நடவடிக்கை குறித்து, பிரணாய் ராயின் மகள்தாரா ராய் தனது கண்டனத்தை மிக விரிவாக பதிவு செய்துள்ளார்: அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘என்டிடிவி’-க்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த எந்தவொரு சட்டபூர்வமான ஆதாரமும் இல்லாத ஒரு வழக்கைக் காரணம் காட்டி, எனது பெற்றோர் நாட்டை விட்டுவெளியேறுவதற்கு அனுமதி இல்லையென்று எங்களுக்குத் திடீரென தெரிவிக்கப்பட்டது.எனது பெற்றோர் குறிப்பிட்ட காலத் திற்கு முன்பே செலுத்திய வங்கிக் கடன்மீதான வழக்கு அது. எனது பெற்றோர்இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறார்கள். அரசாங்கமோ, இந்தவழக்கை தீர்க்க மறுத்து, அதை இரண்டுஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கிறது. உரிய செயல்முறையைப் பின்பற்ற மறுக்கிறது. எனது பெற்றோர் முழுமையாகக் கேட்பது என்னவெனில், உரிய செயல்முறை மட்டுமே.ஓர் அரசாங்கம் உரிய செயல்முறையைப் பின்பற்றாதபோது, அதன் குடிமக்களுக்கு என்ன வேண்டுமானாலும் அநீதிசெய்ய முடியும். காலம் இருட்டாகவும் பயமாகவும் இருக்கிறது. ஓர் அரசாங்கமே நமதுமுழு வரலாற்றையும் அழித்து, நம் மக்களில்ஒரு பகுதியைக் காட்டிக் கொடுக்கிறது அல்லது அது தனிப்பட்ட உரிமையையும் சுதந்திரத்தையும் தாக்குகிறது என்றே பார்க்கிறேன்.
நாங்கள் அனைவரும் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறோம். ஒரு வருடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓர் அழகான விடுமுறை நின்றதாலோ; எல்லா பணமும் வீணாகி விட்டதாலோ மட்டுமல்ல; நாங்கள் சுதந்திரமாக இல்லை என்று உணருவதே காரணமாகும். மனம் உடைந்ததாக உணர்கிறேன். நானும் எனது குடும்பமும் தனிப்பட்ட முறையில் ஊழல் நிறைந்த இந்த கிரிமினல் அரசாங்கத்தின் நயவஞ்சகத்தை அனுபவித்து வருகிறோம். நீங்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த ஒரு நபராக இருந்தால், எல்லாமேசரியாக இருக்கிறது என நீங்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறீர்கள் என்றால், உங்கள் கண்கட்டை அவிழுங்கள்.நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் இந்தியாவில் - யாரும் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் உங்களுக்காகக் கூட ஒரு நாள் வருவார்கள். ஏனென்றால், இதுஒரு சர்வாதிகார ஆட்சி.இவ்வாறு தாரா ராய் கூறியுள்ளார்.