மும்பை, ஏப்.17-மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, நவ நிர்மாண்சேனா கட்சி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பாஜக-வைஎதிர்த்தும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.அந்த வகையில், சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராஜ் தாக்கரே பேசியிருப்பதாவது:பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் பரப்பிவரும் பொய்களால் நாடெங்கும், பல்வேறு பிரிவு மக்களிடையே வேறுபாடு அதிகரித்துள்ளது. அவர்கள் இருவருமே விரைவில் அரசியல் உலகிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். மோடி - அமித்ஷாவுக்கு, மகாராஷ்டிரத்தில் உள்ள சிவசேனா உதவி வருகிறது. அந்த கட்சியையும் மக்கள் விட்டு வைக்கக் கூடாது. மோடியும், அமித்ஷாவும் அதிகாரத்தில் இருப்பதற்குக் காரணமான சிவசேனாவைத் தோற்கடிக்க வேண்டும்.ராணுவ வீரர்களின் தியாகத்தை மதிக்கத் தெரியாதவர் நரேந்திர மோடி. அதனால்தான், நாகரிகமற்ற வகையில்,புல்வாமா சம்பவம், பாலகோட் தாக்குதல்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ராணுவ வீரர்களைச் சொல்லிவாக்கு கேட்பது கேவலமானது என்று மோடிக்குத் தெரியவில்லை. வெட்கம் கெட்டவராக மோடி இருக்கிறார். எனவே,வருகின்ற தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு ராஜ்தாக்கரே பேசியுள்ளார்.