மும்பை:
ஆன்லைன் வகுப்புக்கு நெட் வொர்க் வேண்டுமென்பதால் மலையில் குடில் அமைத்து கல்லூரி மாணவிஒருவர் படித்துவருகிறார்.கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. எப் போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தற்போது விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது.
பல மாணவர்களுக்கு ஆன்லைன்கல்விக்கான வசதி இல்லை. செல் போன், லேப்டாப் இருந்தாலும் இணையசேவை இல்லாமல் பல கிராமங்கள் உள்ளன. மகாராஷ்டிராவைச் சேர்ந்தகல்லூரி மாணவி ஒருவர், மலையில் நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் தற்காலிக குடில் ஒன்று அமைத்து தன்னுடைய ஆன்லைன் வகுப்பை தொடர்ந்துவருகிறார். வனத்துறை அதிகாரி தேவ்பிரகாஷ் மீனா பகிர்ந்த அந்த பெண்ணின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க், கன்கவாலி டரிஸ்டே அருகிலுள்ள சுதர்வாடி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ஸ்வப்னாலி சுதார் கல்லூரியில் மும்பையில் உள்ள ஒருகல்லூரியில் கால்நடை மருத்துவத்தில்மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஊரடங்கால் சொந்த ஊர்திரும்பி விட்டார்.தற்போது ஆன்லைன் வகுப்பு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லை. எனவே தமது சுதர்வாடி கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையில் சிக்னல் கிடைக்கும் இடத்தைதேர்வு செய்த ஸ்வப்னாலி, அங்கு சிறியகுடில் அமைத்து அங்கேயே காலை ஏழுமணி முதல் இரவு ஏழு மணி வரை படித்து வருகிறார். அவருடைய மொபைல்
போன் சார்ஜ் இல்லாம்ல் அணைந்துவிடுவதைத் தவிர்க்க ஸ்வப்னாலியின் ஆசிரியர் ஒருவர் “பவர் பேங்க்” ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார்.