மும்பை:
மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு, மத்திய அரசு விமான நிலையங்களில் சரியான முறையில் சோதனை நடத்தாமல் விட்டதே காரணம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேகுற்றம் சாட்டியுள்ளார்.
மராத்தி நாளேடு ஒன்றுக்கு காணொளி மூலம் அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:மகாராஷ்டிராவின் முதல் கொரோனாஆவார். அப்போது காய்ச்சல் உள்ளதா என்பது மட்டுமே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. காய்ச்சல் வருபவர்கள் முன்னெச்சரிக்கையாக மருந்து சாப்பிடுவது வழக்கமாகும். எனவே அந்த நபரை சோதனையின் போது கண்டுபிடிக்காமல் விட்டது, தொற்று பரவ காரணமாகி விட்டது.அத்துடன், ஆரம்பத்தில் மத்திய அரசு அளித்த பரிசோதனை செய் யப்பட வேண்டிய சர்வதேச பயணிகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்தோரை சேர்க்கவில்லை. ஆகவே மாநில அரசுஅவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்தும் முன்பே அவர்கள் மக்களுடன் கலந்து விட்டனர்.தற்போதும் ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அனுப்பும் முடிவு சரியானதுஅல்ல. அவர்களை ஊரடங்கு அறிவிக்கும் முன்பே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்திருந்தால் இத் தனை துயரம் நேர்ந்திருக்காது.
தற்போது கொரோனா சமூக பரவலை நெருங்கி விட்டது. இதை மறைத்துப் பொய் சொல்வதில் அர்த்தமில்லை. மழைக் காலம் நெருங்கி வருவதால் அதையும் சேர்ந்து சமாளிக்கவேண்டியது மிகவும் கடினமான ஒன்றாகும். நான் இதில் முன்னெச்சரிக்கை இன்றி நடந்து எந்த ஒரு தவறான விளைவையும் ஏற்படுத்த விரும்பவில்லை.என்னைப் பற்றி பாஜக-வினர் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இதைப்பார்த்தால் வயிற்றெரிச்சலும் கொரோனாவின் ஒரு அறிகுறியா? என சோதிக்க வேண்டும் போல தோன்றுகிறது.இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.