tamilnadu

img

‘மேக் இன் இந்தியா’ தோல்வித் திட்டமே!

மும்பை:
மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’, ஒரு தோல்வியடைந்த திட்டம்; இதன் மூலம் தொழில்களும் வரவில்லை; வேலைவாய்ப்பும் உருவாகவில்லை என்று ‘எல்’ அண்ட் ‘டி’ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக், கூறியுள்ளார்.“இந்தியா தற்போது பொருட்களுக்குப் பதிலாக, வேலைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது” என்றும் கிண்டலாக, தனது வருத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார்.லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (எல் அண்ட் டி) நிறுவனத்தின் தலைவரான ஏ.எம். நாயக், பொது - தனியார் கூட்டாண்மை தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஸ்.டி.சி.) தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், இந்தியாவின் கடந்த 5 ஆண்டுகால தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி குறித்து,விரிவான நேர்காணல் ஒன்றை அண்மையில் வழங்கியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

“பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து நிறையப் பேசப்படுகிறது. ஆனால், அதில் நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும். தற்போது, நாம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக வேலைகளை ஏற்றுமதி செய்கிறோம். இதற்கான காரணம் என்ன என்பதைஆராய வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இங்கே, உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்யவே ஆர்வமாக உள்ளன. இந்திய நிறுவனங்களுக்குப் போதிய நிதியாதாரம் இல்லை. இறக்குமதிக்கு இதுவும் ஒரு காரணமாகும். அதாவது, இறக்குமதி பெரும்பாலும் கடன்வசதியை அளிப்பதால், அது எளிதாக இருக்கிறது.உலகில் மிக அதிகமான இளைஞர் களைக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாஉள்ளது. ஆனால், அவர்களுக்குப் போதியவேலைவாய்ப்பு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வேலைச் சந்தையில் நுழையும்1 கோடிக்கும் அதிகமான இளைஞர் களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அண்மையில் வெளியான வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வ
றிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ற வேலைவாய்ப்புக்களை உருவாக்கவில்லை என்று கூறுகிறது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் 2008-இல் அமைக்கப்பட்ட என்.எஸ்.டி.சி.யின் 2018-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 11 ஆயிரத்து 35 பயிற்சி மையங்கள் மூலம் 3.98 மில்லியன் மாணவர் களுக்குப் பயிற்சி அளித்தது. ஆனால், இவ்வாறு பயிற்சி பெற்றவர்களில் வெறும்12 சதவிகிதம் பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது.பலவீனமான நுகர்வு மற்றும் தனியார் முதலீட்டின் பின்னணியில் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3 மாதங்களில், பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தவளர்ச்சி, சில மதிப்பீடுகளின்படி நடப்புநிதியாண்டில் மேலும் பலவீனம் அடையக்கூடும். வேலைவாய்ப்புக்களை உருவாக்க குறிப்பாக உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், அது நமது நாட்டில் நடக்கவில்லை.

தற்போது, இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், சீனாவுக்குச் சமமானபொருளாதாரம் நமக்குத் தேவை. சீனா சராசரியாக 12 முதல் 13 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அந்த அளவிற்கான வளர்ச்சி தேவை. அவ்வாறு இல்லையெனில், வேலைகள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே இருக்கும். மத்திய - மாநில அரசுகள், கடுமையான நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் நடந்து வரும் வர்த்தகப் போரை, வியட் நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்கூட பயன்படுத்திக் கொண்டன. ஆனால், இந்தியா அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. என்னிடம் இந்த விஷயம் விடப்பட்டிருந்தால், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி சார்ந்த வணிகத்தை, எவ்வாறு இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து, நான் ஒரு தனிஅமைச்சகத்தையே உருவாக்கி இருப் பேன்.இவ்வாறு ‘எல்’ அண்ட் ‘டி’ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக், கூறியுள்ளார்.