மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசேனாவின் இளந்தலைவர் ஆதித்யா தாக்கரே அமைச்சராகியுள்ளார். மகாராஷ்டிராவின் புதிய அரசினால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 13 பேரும், காங்கிரஸ் சார்பில் 10 பேரும் என 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவாண், அமித் தேஷ்முக் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.நவாப் மாலிக், ஜிதேந்திர அவ்ஹாத், திலீப் வல்சே-பாட்டீல், தனஞ்ஜெய் முண்டே, அனில் தேஷ்முக் உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, அமைச்சராக பொறுப்பேற்றார். இவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.ஆதித்யா தவிர, சஞ்சய் ரத்தோட் உள்ளிட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள னர். திங்களன்று நடந்துள்ளஅமைச்சரவை விரிவாக்கத்தோடு, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அமைச்சரவை, மொத்தம் 43 அமைச்சர்களை கொண்டதாக மாறியிருக்கிறது.