tamilnadu

img

கேரள காடுகளில் பருவ மழை தொடக்கம் பில்லூர் அணையில் நீர்வரத்தை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

மேட்டுப்பாளையம், ஜூன் 16- கேரளாவில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பில்லூர் அணையின் நீர் வரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு உத் தரவிட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள் ளது பில்லூர் அணை. கேரள வனப்பகுதிகள் மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் பெய்யும் மழையே இந்த அணையின் முக் கிய நீராதாரமாகும் கோவை மாவட்டத்தின்  தமிழக கேரள எல்லையோரமுள்ள மேட்டுப் பாளையத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டில் கட் டப்பட்டுள்ள இந்த அணைக்கான நீர்வரத்து தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.  பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 89 அணைகளில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளதால், தமிழக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் பருவமழை பெய்ய துவங்கிவிட்டதால் பில் லூர் அணைக்கான நீர்வரத்தும் வினாடிக்கு 70 கன அடியில் இருந்து  180 கன அடியாக உயர்ந்துள் ளது. இதனால், அணைகளின் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு தமிழக அரசு உத்திர விட்டுள்ளது. இத்தகவல், கோவை மண்டல நீர்வளத்துறையின் அனைத்து பிரிவு செயற்பொறி யாளர்களுக்கும் மாநில அணைகள் பாதுகாப்பு இயக்கம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர்வரத்து நில வரத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து இத்தக வலை, கோவை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் வாயிலாக சென்னையில் உள்ள  முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு உடனுக்குடன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இதன்படி, பில்லூர் அணை யில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்தாண்டு கேரளாவில் பெய்த வரலாறு காணாத பெரு மழை காரணமாக பில்லூர் அணை அதன் மொத்த கொள்ளவான நூறு அடியைத் தாண்டி நிரம்பி வழிந்தது. இதனால் அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 56,000 கன அடி வரை பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. அணையின் பாது காப்பு கருதி திறந்து விடப்பட்ட நீரால் பவானியாற்றில் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட் டுப்பாளையம், சிறுமுகை போன்ற கரையோரப் பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் வீடுகள் மூழ்கி இரண் டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பில்லூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைக்கான நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், அணையில் உள்ள நீர் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பணிகளும் வேகமடை துள்ளது.