அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க் கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.
அதேநேரம் மதுபானக் கடைகள் மட்டும் 7 மணி நேரம் வரை திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆவேசமடைந்தபெண்கள் செவ்வாய்க்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் திடீரென வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.“அத்தியாவசிய பொருட்கள்விற்கப்படும் காய்கறி மார்க்கெட்டுகள் இயங்குவதற்கு 3 மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துவிட்டு, ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் மதுக்கடைகளு க்கு மட்டும் 7 மணி நேரம் அனுமதிவழங்குவதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் லட்சணமா?” என்று முழக்கங்களை எழுப்பினர்.இதனிடையே ஆந்திரா மாநில அரசு, மதுக்கடையை திறந்து விட்ட இரண்டாவது நாளில் ரூ. 68கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. முதல்நாளில் இது 40 கோடிரூபாய் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.