மும்பை:
“தற்போது இருப்பது, நமது முன்னோர்கள் விரும்பிய நாடு அல்ல” என்று இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு, தற்போது அந்த நிறுவனத்தின் முதன்மை வழிகாட்டியாக நாராயணமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு,மும்பையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு, நாராயணமூர்த்தி உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு அதை நமக்குப் பெற்றுத் தந்தனர். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் என்ன நடக்கிறது, என்பதை மாணவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். நமது முன்னோர்கள் விரும்பியதற்கு மாறான நிலையில்தான் தற்போது நாடு உள்ளது. இந்த சூழ்நிலையில், மாணவர்களாகிய நீங்கள் நெஞ்சை உயர்த்தி, எனது முன்னோர்கள் விரும்பிய நாடு இது இல்லை என்று தைரியமாக சொல்ல வேண்டும். உங்களில் எத்தனை பேர் இவ்வாறு சொல்கிறீர்கள்..? நாம் அப்படி சொல்வது கிடையாது. அதனால்தான் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளது. ஒருவர் செய்யும் தவறைமற்றவர் சுட்டிக்காட்ட முயலுவதில்லை. இது தவறானது.இவ்வாறு நாராயணமூர்த்தி பேசியுள்ளார்.