மும்பை:
விவசாயக் கடன் களை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்தஆர்ப்பாட்டம் செவ்வாயன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவான், பாலசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.