சென்னை, ஜன. 27 - ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)’ பதிவு செய்யப்பட்டது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் அ. சவுந்தரராசன், தலைவர் இ. முத்துக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை யில் அவர்கள் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் 16.6.2024 அன்று ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ அமைக்கப்பட்டது. 26.6.2024 அன்று சங்கத்தை பதிவு செய்யுமாறு, சென்னை தொழிற்சங்க பதி வாளரிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனு செய்யப்பட்டது. இவ்வாறு விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலையில் சங்கத்தைப் பதிவுசெய்து அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், இந்த தொழிற் சங்க பதிவு சட்டத்துக்கு மாறாக, தொழிற் சங்கப் பதிவை வார கணக்கில் காலதாமதம் செய்தது தொழிலாளர் துறை. அதற்குப் பின்னால் சாம்சங் நிறுவனமும் அவர் களுக்கு ஆதரவாக தமிழக அரசும் செயல் பட்டதே இந்த நெடிய காலதாமதத்திற்கு காரணமாகும். தவிர்க்க முடியாத சூழலில் தான், உயர் நீதிமன்றத்தை நாடியது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு). இந்த வழக்கில் தொடர்ச்சியாக வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன. தொழிற்சங்கப் பதிவை தரக்கூடாது என்று ‘சாம்சங்’ நிறு வனமும், ஒரு வாதியாக தன்னை இணைத்துக் கொண்டது. அவர்களை வாதியாக சேர்க்குமாறு ‘சாம்சங்’ நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு வழக்கறிஞரும் வாதாடினார். இவ்வாறு இரண்டு எதிர்ப்புகளையும் கடந்து, சிஐடியு தரப்பில் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தும், சிவக்குமாரும் வாதிட்டனர். இந்த வழக்கு மீண்டும் மீண்டும் நடந்தபோது, ‘சட்டப்படி நடக்க வேண்டிய ஒரு நிகழ்வு; ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்?’ என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. பதிவுசெய்த முறையீட்டு மனுவின் மீது நான்குவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2024 டிசம்பர் 5 அன்று, நீதிபதி கூறினார். தமிழக அரசு 6 வாரம் கால அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு, 2024 டிசம்பர் 17 அன்று ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 வார கால அவகாசம் முடிவடை யும் கடைசி நாளான 27.1.2025 அன்று இப்போது தொழிற்சங்க பதிவாளர், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். சங்கம் அமைக்கப்பட்ட பின், பதிவு செய்த 45 நாளில் கிடைக்க வேண்டிய ஒரு சட்டத்தின் நிகழ்வை, பெறுவதற்கு 212 நாட்கள் போராட வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். தமிழக தொழிற்சங்க வரலாற்றில் நிகழக் கூடாது ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
இந்த கால தாமதத்திற்கு பின்னால், ‘சாம்சங் இந்தியா’ நிர்வாகமும் அவர்களுக்கு ஆதரவான ஒரு அமைப்பை உருவாக்கி அதை பலப்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகை யிலேயே தொழிற்சங்கப் பதிவை கால தாமதம் செய்தது தமிழக அரசு. ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ பதிவு என்பது இந்திய தொழிற்சங்க வர லாற்றின் முக்கிய நிகழ்வாகும். உலகளாவிய ஒரு நிறுவனத்தில் கடும் தடைகளை மேற்கொண்டு தான், அதைப் பெற வேண்டி யது சூழல் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் ஒரே பதிவுபெற்ற பெரும்பான்மை தொழிற்சங்க மாக இப்பொழுது சிஐடியு தொழிற்சங்கம் உருவாகி இருக்கிறது. எனவே, தொழிலாளர்கள் முன் வைத்திருக்கிற கோரிக்கைகள் மீது சாம்சங் நிர்வாகம் சுமூக உடன்பாடு காண முன்வர வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். எந்தவொரு பன்னாட்டு நிறு வனமும் இந்திய நாட்டின் நிறுவனமும் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தொழிற்சங்க உரிமை சார்ந்த சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். தொழிலாளர் உரிமைகள் குறித்த அரசின் தொழிலாளர் கொள்கை என்ன வென்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறை அனுமதி மறுப்பது, தலையிடு வது, பொய் வழக்கு போடுவது போன்ற தொழிலாளர் விரோத போலீஸ் கொள்கை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். தொழிற்சங்கப் பதிவை பெறுவதற்கான இந்த போராட்டத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சிவக்குமார், ஜெ. பிரதாபன் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொழிற்சங்க உரிமைக்கான இந்த நெடிய போராட்டத்தில் தொழிலாளர் உரிமை கள் மேம்படவும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்டும் தொழிற்சங்க பதிவுக்காக குரல் கொடுத்த முன்னாள் நீதியரசர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக் கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், முற்போக்கு ஊடகவியலாளர்களுக்கும், தொழிற்சங்க போராட்டத்தில் கைகோர்த்து ஆதரவு நல்கிய அனைத்து தொழிற்சங்கங் ளுக்கும், தொழிலாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரி இயக்கங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அ. சவுந்தரராசன், இ. முத்துக் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.