செப்.28 – 30 இல் வாலிபர் சங்க மாநில மாநாடு
தருமபுரி, மே 4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு செப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்துவது, என சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல்லில் மே 3, 4 ஆகிய தேதி களில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் நடை பெற்று வரும் சாதிய ஆணவக் கொலைக்கு எதிராகவும், கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு குறித்தும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் கடலூரில் மாநில அளவிளான கருத்தரங்கம் நடத்துவது எனவும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு செப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பொதுத்துறைகள் முழு வதும் தனியார்மயமாகி வரு கின்றன. இச்சூழலில் அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறை யிலான வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்த முறையை ஒன்றிய, மாநில அரசுகள் வேகமாக செய்து வரு கின்றன. நாட்டில் அனைத்து தனி யார் துறைகளிலும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான கோரிக்கை யை வலியுறுத்தி, ஜூன் 14 ஆம் தேதியன்று சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது, என மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, இணைச்செயலாளர்கள் ச.செல்வராஜ், சந்துரு, மாநில துணைத்தலைவர் கே.ஆர்.பாலாஜி, தருமபுரி மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், மாவட்டத் தலைவர் குரளரசன், பொருளாளர் சிலம்பரசன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.