tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சூறைக்காற்றுக்கு திணறிய கிரிக்கெட் வீரர்கள்

கோவை, மே 4- கோவையில் வீசிய சூறைக்காற்றால், மைதானத் தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளை ஞர்கள் நிலை தடுமாறினர். கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று மழை பெய் யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், கணுவாய் - யமுனா நகர் பகுதியில் திடீ ரென பலத்த சூறைக்காற்று வீசியது. அப்பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக் கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராத விதமாக சுழன்று அடித்த சூறைக்காற்றின் வேகத் திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் நிலை தடு மாறினர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மைதானத்தில் இருந்த பொருட்களும் தூக்கி வீசப் பட்டன. சூறைக்காற்றின் தாக்கத்தால் விளையாட்டை பாதியில் நிறுத்திய இளைஞர்கள், பாதுகாப்பான இடங் களுக்கு ஓடி தப்பினர். சிறிது நேரத்திற்குப் பிறகு காற் றின் வேகம் குறைந்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழ வில்லை. இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலை விபத்தில் பெண் தொழிலாளி பலி

உதகை, மே 4- கேத்தி அருகே கேரட் அறுவடை செய்யும் தொழிலா ளர்கள் சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத் தில் கவிழ்ந்ததில், பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் கேரட் அறு வடை செய்ய தடை உள்ளது. ஆனால், அதனையும் மீறி  நள்ளிரவு நேரத்தில் கேரட் அறுவடையில் தொழிலா ளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் தூக்க மின்மையோடு தொழிலாளர் வாழ்ந்து வருகின்றனர். நள் ளிரவு நேரத்தில் செல்வதால் விபத்து ஏற்பட்டும் வருகி றது. இந்நிலையில், உதகை அருகே கேத்தி பாலாடா  பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்ய  10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து சென்ற  பிக்கப் ஜீப் வாகனம், கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத் தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாகனத் தில் பயணித்த தஷ்மி என்ற வடமாநில இளம்பெண் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து லவ்டேல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத்தில் வைத்திருந்த பணம் கொள்ளை

சேலம், மே 4- கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் வைத் திருந்த விவசாயின் பணம் இரண்டரை லட்சத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல் துறையி னர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கருப் பன்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (46) விவ சாயம் செய்து வரும் இவர், சேலம் மாவட்டம், கெங்க வல்லி அருகே உள்ள தம்மம்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் ரூ.4 லட்சத்தை எடுத்துள் ளார். அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, பூச்சிக்கொல்லி மருந்து வாங்க சென்றுள்ளார்.  இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள்,  அவரது இருசக்கர வாகனத்தை தொடர்ந்து சென்றுள் ளார். அப்போது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வண்டியில் அவர் வைத்திருந்த பணத்தை எடுத்து பார்த்த போது, பணம் குறைந் திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், அந்த பணத்தை திருடிச் சென்றது தெரி யவந்தது. அந்த நபர்களை காவல் துறையினர் தேடி  வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறு

கோவை, மே 4- மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  மற்றும் நடத்துநரிடம், மது போதையில் தகராறில் ஈடு பட்ட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஆதிமாதையனூர் கிராமம் வரை உள்ளூர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த  பேருந்து அட்டவணைப்படி முறைப்படி இயக்கப்படு வதில்லை. குறிப்பாக, இரவு நேரத்தில் வரும் பேருந்து  வருவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சனி யன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆதிமாதை யானுர் வரை சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் மூர்த்தி  மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் இயக்கியுள் ளனர். அப்போது அரசு பேருந்தில் மது போதையில் ஏறிய  மூன்று பேர் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் ஏன் சரியாக  பேருந்தை நேரப்படி இயக்குவதில்லை என தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காரமடை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.

ஐஸ்கீரிம் கடைகளில் சோதனை

நாமக்கல், மே 4- பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற் கொண்டனர். ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உரிய பாது காப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண் காணிக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் செயல்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவ னத்தில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரெங்கநா தன் தலைமையில் அதிகாரிகள் சனியன்று திடீர்  சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள குளிரூட்டும்  பெட்டிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப்பொருட் கள், பயன்படுத்தப்படும் தண்ணீர், ரசாயனப் பொடிகள்  ஆகியவை குறித்து சோதனை நடைபெற்றது. ஐஸ்கிரீம்  தயாரிப்பதற்கான ரசாயனப் பொடிகளில் செயற்கை வண்ணம் மிகுதியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அதிகா ரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண் ணீரை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் அதிகம் விரும்பும் குச்சி ஐஸில் பயன்படுத்தப்படும் குச்சிகள் சுத்தமாக இருக்க வேண்டும், என அறிவுறுத்தினர்.