துக்கோட்டை மாவட்டத்தில் 2,849 பேர் நீட் தேர்வு எழுதினர்
துக்கொட்டை, மே 4- தேசிய தேர்வு முகமையின் நீட் நுழைவுத் தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,849 நபர்கள் எழுதியுள்ளனர். புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தைப் பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்ததாவது:- மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கந்தர்வகோட்டை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவபுரம் எம்.ஆர்.எம். பள்ளி, மாத்தூர் பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி ஆகிய 7 தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு 2,929 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,849 நபர்கள் தேர்வு எழுதினர். 80 நபர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டு, சுமூகமான முறையில் தேர்வு நடைபெற்றது என்றார். தனித்துணை ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளித்துணை ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.