ஆலங்கட்டியால் பாப்பாளி, தக்காளி சேதம்
தருமபுரி, மே 3- பாலக்கோடு அருகே சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், பாப்பாளி தோட்டத்தி லிருந்த மரங்கள் சேதமடைந்தன. தருமபுரி மாவட்டம், பாலக் கோடு அருகே உள்ள பெல்லு அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி பசுபதி. இவர் 3 ஏக்கர் நிலத் தில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப் பாளி சாகுபடி செய்து வந்துள்ளார். இதுவரை ரூ.8 லட்சம் வரை செல வான நிலையில், அறுவடை செய் யும் நேரத்தில் வெள்ளியன்று இரவு சூறாவளி காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பப்பாளி மரங்கள் வேறோடு சாய்ந்தும், இரண் டாக உடைந்தும் பெரும் சேதம் ஏற் பட்டது. வருவாய்த்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் சேதத்தினை பார்வையிட வர வில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், பப்பாளி தோட்டம் அழிந்ததால் கடன் சுமை யில் சிக்கி உள்ளதாகவும், தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், என விவசாயி பசு பதி கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று, பாலக்கோடு அருகே உள்ள பெல்ரம்பட்டி பகுதி யில் சூறாவளி காற்றுடன், ஆலங் கட்டி மழை பெய்ததால் சுமார் 100 ஏக்கர் அளவில் தக்காளி தோட்டம் சாய்ந்து, நீரில் மூழ்கி நாசமாகின, மேலும் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயி ராஜன் என்பவர் கூறுகையில், சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழையால் தனது தக்காளி தோட்டம் முற்றிலும் சேதமாகியது. ஏற்கனவே தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு விற்பதால், நஷ்டமடைந்து வரும் நிலையில், தற்போது மழையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், தக்காளி தோட்டம் அழிந்ததால் கடன் சுமையில் சிக்கி உள்ளோம். எனவே, தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், என்றார்.