நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் மறியல்
நாமக்கல், மே 4- தேசிய தேர்வு முகமையைக் கண்டித்து, நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகி யவை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்களாக இருந்தன. இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் 480 மாணவர்களும், பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் 720 பெண்களும் தேர்வு எழுதுவதாக இருந்தது. இந்நிலையில், ஞாயி றன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வுகள் நடக்கும் என அறி விக்கப்பட்டிருந்தது. இந்த மையங் களில் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகள் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, 420 பேர் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டபோது சர்வர் பிராப் ளம் ஏற்பட்டது. இதனால் காலதாம தம் ஏற்பட்டது. சர்வர் சரியாக வில்லை என்ற சூழ்நிலையில் மாணவ, மாணவிகளை தேர்வு மையத்திற்குள் பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே தேர்வு எழுத அனுமதித்தனர். உரிய நேரத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப் பட்டது. ஆனாலும், நீட்தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்தபோதும், பதட்டத்துடன் அவசர அவசரமாக தேர்வு எழுதும் அறைக்குள் சென்ற னர். தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நிர்வாகம் போதுமான வசதிகள் செய்யாமலும், பயோமெட்ரிக் சர் வர் குறைபாடுகள் இருப்பதாக வும், பயோமெட்ரிக் கருவி ஒன்று மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் 300க்கும் மேற்பட்டோர் பயோமெட் ரிக் வைக்காமல் உள்ளே சென்று தேர்வு எழுதினர். இதனால் தங்கள் குழந்தைகள் நீட் தேர்வில் தேர்வு எழுதியும், அரசின் நிர்வாக கோளா றால் தேர்ச்சி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முறை யான ஏற்பாடுகள் செய்யாமல் தேர்வு நடத்தும் நிர்வாகத்தை கண் டித்து, பெற்றோர்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் நிலைய ஆய்வாளர் வெங் கட்ராமன், வட்டாட்சியர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண் டும். தேர்வு எழுதும் நேரத்தை நீட் டித்து தர வேண்டும். அதுவரை போராட்டத்தை விளக்கிக் கொள்ள மாட்டோம் எனக்கூறி பெற்றோர் கள் மறியலை தொடர்ந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுக ையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 720 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 9 பேர் வரவில்லை. மீதியுள்ள 711 பேர் எழுத அனுமதிக்கப்படும் போது, 411 மாணவிகள் தேர்வு எழுத பயோமெட்ரிக் வைத்து தேர்வு அறைக்குள் சென்று விட்டனர். சர் வர் சரியாக வேலை செய்யாத தால் மீதமுள்ள 300 பேர்களை பயோ மெட்ரிக் பதிவு இல்லாமல், விடைத் தாள் எண், ஓஎம்ஆர் தாள் எண் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுத அனுமதித்துள்ளோம். தேர்வு எழுதுவதில் எந்த காலதாமதமும் ஏற்படவில்லை. தேர்வு முறையாக பதிவு செய்யப்படும். பயோமெட் ரிக் இல்லை என்றாலும், தேர்வு தாளை வைத்து அவர்கள் தேர்வு பதிவு செய்யப்படும். முறையாக பேப்பர் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும், என்றனர்.