2.5 டன் காய்கறிகளில் ஜல்லிக்கட்டு காளை!
உதகை, மே 4– நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் 43 ஆவது காய்கறி கண்காட்சி சனி யன்று வெகு விமரிசையாகத் துவங்கியது. கோடை விடுமுறையை யொட்டி பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், மலைப்பிரதேசமான உதகைக்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பல் வேறு வடிவங்களில் கண்காட்சிகள் நடத் தப்படுகிறது. இதன்ஒருபகுதியாக கோத்த கிரியில் காய்கறி கண்காட்சி சனியன்று துவங்கியது. இதில், சுற்றுலாப் பயணிக ளையும், பொதுமக்களையும் பெரிதும் கவ ரும் வகையில், இந்த ஆண்டு கண்காட்சியில் 2.5 டன் காய்கறிகளைப் பயன்படுத்தி பிர மாண்டமான ஜல்லிக்கட்டு காளை உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் கேரட் போன்ற காய்கறிகளைக் கொண்டு உருவாக் கப்பட்ட இந்த கலைப்படைப்பு அனை வரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, உருளைக்கிழங்கில் சிலம்பாட்டம் ஆடும் வீரர், கேரட் மற்றும் பீட்ரூட்டில் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, கத்த ரிக்காய், கோவக்காய் மற்றும் பஜ்ஜி மிளகா யில் மரகதப் புறா, பச்சை மற்றும் சிவப்பு மிளகாயில் பச்சைக்கிளி, மற்றும் சுக்கினி, கோவக்காய், பச்சை, சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தஞ்சாவூர் பொம்மை போன்ற கண்கவர் சிறிய உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்கொள்ளாக் காட்சியை சுற்று லாப் பயணிகளும், பொதுமக்களும் வியந்து பார்த்து ரசித்தனர். கண்காட்சி துவக்க விழா வில் காவல் கண்காணிப்பாளர் நிஷா, தோட் டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.