சென்னை, டிச. 4 - நம்பிக்கை மிகுந்த வர்க்கப் போராட் டங்களை முன்னெடுப்போம் என்று உலக தொழிற்சங்க சம்மேளன தலை வர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அறைகூவல் விடுத்துள்ளார். உலக தொழிற்சங்க சம்மேளனம் - இந்திய தொழிற்சங்கங்களின் அமைப்புக்குழு சார்பில் செவ்வா யன்று (டிச.3) சென்னையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ‘தொழிலாளி வர்க்கம் முன் உள்ள தற்கால சர்வதேச சவால்கள் எனும் பொருளில் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: இன்றைய உலகச்சூழல் மிக சிக்கலான நிலையில் உள்ளது. முத லாளித்துவம், தொழிலாளி வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதலை ஓயாது தொடுத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களது வாழ்க்கை, உரிமை கள், வாழ்வாதாரத்தின் மீது இடைய றாது தொடர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. எல்லாம் லாபத்திற்காக சுற்றுச் சூழல் அழிவுக்கும் முதலா ளித்துவ லாபவெறியே காரணம். அவர்களது வெற்று முழக்கங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு கிடையாது. பசுமை வளர்ச்சி என்று ஏகாதிபத்திய நாடுகள் பேசுகின்றன. பசுமை என்பது சுற்றுச் சூழல் பாது காப்பு அல்ல, அவர்களது மொழியில் அது லாபம். லாபம் தரக்கூடிய வளர்ச்சி க்காக அவர்கள் சுற்றுச்சூழல் என்ன ஆனாலும் கவலை கொள்ள மாட்டார் கள். தங்கள் லாபத்திற்காக அவர்கள் தொழிலாளர்கள் ஒற்றுமையை சிதை ப்பார்கள். தொழிற்சங்க இயக்கங்களை அழித்தொழிக்கவே துடிப்பார்கள். நமது முன்னுரிமை தொழிலாளர் ஒற்று மையும், தொழிற்சங்க இயக்க பாது காப்பும்தான்.
யார் பயங்கரவாதி
உலகத் தொழிற்சங்க சம்மேளனம் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப் பாட்டை தெரிவிக்கிறது. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள், குழந்தைகள் கொன்று குவிக்க ப்பட்டுள்ளனர். ஆனால் ஹமாஸ்தான் எல்லாவற்றையும் தொடங்கியது என்று சித்தரிக்கின்றனர். ஹமாஸ் தீவிர வாதிகள் என்கின்றனர். உள்ளபடியே பல்லாயிரம் பேரை அழித்தொழிக்கும் இஸ்ரேல் அரசு தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட நாடுகள் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரு கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மக்கள் சீனத்திற்கு நெருக்கடி கொடுப்ப தற்காக, அந்தப் பகுதியில் தனது வலிமையைப் பெருக்கிக் கொள்வ தற்காக நேட்டோ தரப்பில் இருந்து ரஷ்யா மீது தாக்குதலை (உக்ரைனை முன் வைத்து) நடத்தி வருகிறது. இந்தப் போர்கள் எல்லாம் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உலகத் தொழிற்சங்க சம்மேளனம் கோருகிறது. சர்வதேச தொழிற்சங்க மகா சம்மேளனம் (ஐடியுசி) தாக்கு தல் நடத்துவோர் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. நாம் சர்வதேச அளவில் தொழிலாளர் ஒற்றுமைக்காக இந்தப் போர்களுக்கு எதிராக நிற்கி றோம். பாட்டாளி வர்க்க சர்வதேசி யத்தை உயர்த்திப் பிடிக்கிறோம்.
நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் போராட்டங்கள்
தொழிற்சங்கங்கள் முன்னெ டுக்கும் வர்க்க போராட்டங்களில் பெரும் நம்பிக்கை கொள்கிறோம். அவற்றில் வெற்றியும், பின்னடைவும் வந்தபோதிலும் ஒன்றுபட்டுப் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். அவற்றின் சாதகமான விளைவுகள் முக்கியமானவை. உலகில் நடக்கும் வெற்றிகரமான போராட்டங்கள் நமது நம்பிக்கைக்கு மேலும் உரம் சேர்க்கின்றன. மேலும் ஒன்றுபட்ட இயக்கங்களைக் கட்டியெழுப்பும் வலுவை அளிக்கின்றன. ஆனால், முதலாளித்துவம் இந்த ஒற்றுமை யைத்தான் சீர்குலைக்கத் துடிக்கிறது. தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்க பல தந்திரங்களை பயன்படுத்துகிறது. தேசம், பிராந்தியம், இனம் என்று ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் மத்தியில் பாகு பாடுகளை உருவாக்கிட முனைகிறது. தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்குப் போராடினால், புலம் பெயர்ந்து வந்திருக்கும் தொழிலா ளர்கள்தான் உங்கள் ஊதியங்கள் கீழ் நிலையிலேயே இருக்க காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்
புலப்பெயர்வுக்கு யார் காரணம்?
உண்மையை மறைத்து திசை திருப்ப கையாளும் உத்திகளில் ஒன்று புலப்பெயர்வு. புலப் பெயர்வுக்கு யார் காரணம், இவர்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளுக்கும் யார் காரணம்? சிரியாவில் இருந்து 80 லட்சம் பேர் வெளியேற வேண்டிய தேவையை ஏகாதிபத்திய தாக்குதல்கள்தான் விளைவித்தது. உரிமை மறுப்புக்கு இவர்கள் சொல்லும் சாக்குபோக்கு களை தொழிலாளி வர்க்கம் தெளி வாக உணர வேண்டும். நாம் தொழிலா ளர்கள், ஒரே வர்க்கம். தேசம் கடந்த சர்வதேச தொழிலாளர் ஒருமைப்பாடு நமது குரல்! உலகத் தொழிற்சங்க இயக்க வரலாறு, நெடிய போராட்டங்கள் பற்றிய புத்தகத்தை நான் எழுதி இருக்கிறேன். ஆனால் நான் ஓர் எழுத் தாளர் அல்ல. இப்போதைய சவால் களை எதிர்கொள்வதற்கான பல்வேறு கூறுகளை இந்த நெடிய வரலாற்றில் பொதிந்துள்ள செய்திகள் உங்களுக்கு நிச்சயம் வழங்கும். நமது வர்க்கத்திற் கான வலுவான வாதங்களை, பயனுள்ள தரவுகளை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.
பொம்மை அரசுகளை நிறுவும் ஏகாதிபத்தியம்
மே 9 நாசிசத்தை சோவியத் யூனி யனின் செஞ்சேனை வீழ்த்திய வெற்றி நாள். பாசிச சக்திகளை முறியடித்த தின மாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் ஏகாதிபத்தியம் அந்த வீரஞ்செறிந்த வரலாற்று நினைவுகளை சிதைக்க வெவ்வேறு பொய்களைக் கட்ட மைத்தது. யுகோஸ்லாவியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச ஆட்சிகளை சர்வாதிகாரம் என்று திரித்தனர். பெண்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லி ஆப்கானிஸ்தானத்தில் (ஆட்சி அமைப்புக்கு எதிராக) எதிர்காலத்தை ஊக்குவித்து சீர்குலைத்தனர். தங்க ளுக்கு வசதியான பொம்மை அரசுகளை வெவ்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியம் நிறுவியது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் நாட்டுக்கு எதிராகத் தொடுத்த போரை உலக தொழிற்சங்க சம்மேளனம் எதிர்த்தது. ஆனால் ஐடியுசி அமைப்பு ஆதரித்தது. சிலியில் புரட்சியாளர் சால்வடார் அலெண்டே ஆட்சியை ஏகாதிபத்திய கைக்கூலி பினோசெட் வீழ்த்தியதை நாம் எதிர்த்து நின்றோம். பினோ செட் பக்கம் நின்றது ஐடியுசி. இந்தோனேசியாவில், நிகரகுவாவில் எதிர்ப்புரட்சி சக்திகளின் ஆட்டங்களை நாம் எதிர்த்து வந்திருக்கிறோம். ஐடியுசி ஏகாதிபத்திய ஆதரவு நிலை யெடுத்தது. எனவே, உலகத் தொழிலாளி வர்க்கம் மிகப் பெரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில் சர்வ தேச தொழிலாளி வர்க்க ஒருமைப் பாடும், உறுதி மிக்க தொழிற்சங்கப் போராட்டங்களும், ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிரான உறுதிமிக்க கூட்டு முழக்கங்களும் இன்றைய தேவை. நம்பிக்கை மிகுந்த வர்க்கப் போராட்டங்களை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
நூல் வெளியீடு
இந்த நிகழ்விற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலத் தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன், ஏஐயுடியுசி மாநிலச் செயலாளர் வி.சிவக்குமார், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் எம்.திரு நாவுக்கரசு ஆகியோர் தலைமை தாங்கினர். ஜார்ஜ் மாவ்ரிகோஸ் எழுதி, சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்கார வேலு மொழிபெயர்த்த ‘உலக தொழிற் சங்க இயக்கத்தின் வரலாறு குறித்த விமர்சன பார்வை: உத்தி மற்றும் அணுகுமுறையில் உள்ள பிரச்சனை’ எனும் நூலை மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளி யிட, ஏஐடியுசி அகில இந்திய செய லாளர் டி.எம்.மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். சர்வதேச ஓய்வூதியர் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் அன்டா அனஸ்டாசகி, சம்மேளனத்தின் துணைப்பொதுச் செய லாளர் ஸ்வதேஷ் தேவ் ராய் நோக்க வுரையாற்றினார். சம்மேளனத்தின் நிதி கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் நன்றி கூறினார். முன்னதாக சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் வர வேற்றார்.