tamilnadu

ஏ.ஆர். ரகுமானுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவுக் குரல் எழுப்பாதது ஏன்?

ஏ.ஆர். ரகுமானுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவுக் குரல் எழுப்பாதது ஏன்?

சென்னை, ஜன. 22 - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்  மீதான வன்மம் பொதிந்த விமர்சனத் தாக்குதல்களுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா  எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் வெறுப்பு அர சியல் எவ்வாறு மிகைத்து இருக்கிறது என்பதையும், `ஹிந்தி திரைத்துறையில் தான் புறக்கணிக்கப்பட்டதையும் ஏ.ஆர்.ரகுமான் ஊடக பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். இதனை யடுத்து அர்னாப் கோஸ்வாமி, கங்கனா  ரணாவத் போன்றோரும், வலதுசாரி ஊடகங்களும் ஏ.ஆர். ரகுமானை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இசைத்துறையில் கண்ணியமான இடத்தை வைத்திருக்கும் ஏ.ஆர். ரகு மான் மீது வன்மத்தோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. சிறுபான்மை  சமூ கத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் குறி வைக்கப்படுகிறார்.   இந்நிலையில்,  தமிழ்த்திரை உலகத்தினர் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது வேதனை அளிக்கிறது. தமிழ்ச் சமூகமும், இந்தியச் சமூகமும் வெறுப்பு அரசியலை கண்டிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.