tamilnadu

img

சுடப்பட்ட உடலை கண்டுபிடித்த இடத்தில்

மனிதனாக வாழுங்கள்!

“ஒரு கிறிஸ்துவர் கொடுத்த 400  ரூபாய், முஸ்லீமா கிய நடிகர் மம்மூட்டி கொடு த்த பணத் தால் தாலி வாங்கி  ஓர் இந் துப் பெண்ணின் கழுத்  தில் கட்டி வாழ்வைத் துவங்கி னேன் ...சாதி,மத வெறியை  விட்டு விடுங்கள் ...மனித னாக வாழுங்கள்”. அண்மையில் காலமாகி விட்ட நடிகர் சீனிவாசன் இந்  திய மக்களுக்கு விடுத்துள்ள  செய்தி தற்போது கண்ணீரு டன் கவனிக்கப்படுகின்றது. நடிகராக, திரைக்கதை  ஆசிரியராக, வசனகர்த்தா வாக, தயாரிப்பாளராக, இயக்குநராக தடம் பதித்த மாபெரும் கலைஞரான சீனி வாசன்- மாமனிதனாக இன்று  இந்திய மக்கள் அனைவரின்  மனதிலும் இடம் பிடித்து விட்  டார் என்றால் மிகை யில்லை. மகத்தான கலைஞரான மம்முட்டியின் கண்களில் பொங்கிய கண்ணீரே அதற்கு சாட்சி.

சுடப்பட்ட உடலை கண்டுபிடித்த இடத்தில்...

திப்பு சுல்தான் பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது. அவரது சுடப்பட்ட உடலை தேடிக் கண்டுபிடித்த இடத்தை பார்த்தேன். அவரது வம்சாவளி திரு மன்சூர் அலியின் அலைபேசியை நான் தேடிப்பிடித்து அவரோடு பேசினேன்.ஆச்சர்யப்பட்டார். “கூட்டம் கூட்டமாக சமாதியை பார்த்துவிட்டுப்  போவார்களே தவிர, யாரும் என்னிடம் பேசிய தில்லை. நீங்கள் முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறீர்” என்றார். அவர் குடும்பத்துக்கு உரிய  உரிமையைப் பெற அரசாங்கத்துடன் போராடி வருவதாகக் கூறினார். என்னை சந்திக்க சென்னை வருவதாகவும் கூறினார்.  சரித்திர பாடப் புத்தகத்தின் மடக்கி வைக்கப்பட்ட ஒரு பக்கத்திலி ருந்து திப்பு டப்புன்னு என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி “ஒழுங்கா படிக்காமலேயே இதெல்லாம் செய்றீயே? இன்னும் படிச்சிருந்தா?”

மனோரமா (எதிர்) மனோரமா

போலிச் செய்திகளை வெளியிடு வதை “வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி” செய்திகள் என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் மைய நீரோட்ட ஊடகங்களே அப்படிச் செய்யத் தொடங்கிவிட்டன. கேரளாவில் இருந்து வெளியாகும் மலையாள மனோரமா நாளிதழ் இடதுசாரிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் முன்னணி வகிக்கிறது.  சில நாட்களுக்கு முன்பாக, ஒரு சம்பவம் நடக்கி றது. காவல்துறை சோதனையின்போது நடந்த கை கலப்பில் ஒரு காவலரும், ஒரு இளைஞரும் காயமடை கிறார்கள். காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்றும், அந்த இளைஞர் ரத்த  வெள்ளத்தில் துடிதுடிக்க சாலையிலேயே கிடந்தார் என்றும் மலையாள மனோரமா அரைப்பக்க செய்தி யை வெளியிட்டது. அது பொய்யான செய்தி என்று  மருத்துவமனை வீடியோக் காட்சிகளால் அம்பலப் பட்டது. இது பொய்யான செய்தி என்று அக்குழு மத்தின் தொலைக்காட்சி “இளைஞர் அலட்சியப் படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது” என்று வாசித்தது. சமூக வலைத்  தளங்களில் மலையாள மனோரமாவை வறுத்து எடுக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறாரா?

இந்தத் தலைப்பில் பாட லாசிரியர் ஜாவேத் அக்  தரும், மதப் பேச்சாளர் களில் ஒருவரான ஷமைல் நட்வியும் டிசம்பர் 20  ஆம் தேதியன்று விவாதித்தி ருக்கிறார்கள். தலைநகர் புதுதில்லியில் நடந்த இந்த விவாதம் குறித்து மூன்று வகையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன. சிலர், இது  பயனற்றது, இந்த நேரத்தில்  தேவையற்றது என்று கூறி யுள்ளனர். சிலரோ, நம்  பிக்கை சார்ந்து ஷமைல் நட்வி பேசியது சரி என்கி றார்கள். வேறு சிலர், அறிவி யல் மனப்பாமையோடு ஜாவேத் அக்தர் பேசிய தற்கு ஆதரவு தெரிவிக்கிறார்  கள். இந்த விவாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் கௌஹர் ரசா,  “ஒட்டுமொத்த எதிர்மறைக் கருத்துகளை எப்படிச் சொல்வது, அவற்றை எப்ப டிக் கேட்டுக் கொள்வது என்பதற்கான எடுத்துக்காட்  டாக இந்த விவாதம் இருந் தது. இப்போதெல்லாம் அறி வியல் ரீதியான பகுத்தறிவு  தாக்குதலுக்கு உள்ளாகி றது. கடவுள் பெயரால் பெண்  கள், தலித்துகள், பழங்குடி யினர் நசுக்கப்படுகிறார்கள். மதச்சார்பற்ற புத்தகங்கள், கருத்துகள், பாடங்களில் இருந்து நீக்கப்படுகின்றன. போலிச்சாமியார்கள் தங்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் பேச அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற  விவாதங்கள் அவசியமாகி றது” என்கிறார். 

தலைவியானார் லிங்கம்மா

குடும்பக் கடனுக்காக கொத்தடி மையாகப் பணியாற்றி, அதிலி ருந்து விடுவிக்கப்பட்ட லிங்கம்மா,  தெலுங்கானாவில் நடந்த உள்ளாட் சித் தேர்தலில் போட்டியிட்டு கிராம ஊராட்சித் தலைவராகியுள்ளார்.  ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் கொத்தடிமை ஒழிப்புக்காக  இடது சாரிக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. குடும்பக் கடன் என்ற பெயரில்  பரம்பரை, பரம்பரையாக கொத்தடி மைகளாகப் பணிபுரியும் அவலம் முடி வுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்படி மீட்கப்பட்டவர்களில் ஒரு வர்தான் லிங்கம்மா. பழங்குடியி னத்தைச் சேர்ந்தவர். அமரகிரி ஊரா ட்சித் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

கவனம் பெறாத...

கிரிக்கெட் வெற்றிகளைத் தாண்டி சதுரங்கம், ஹாக்கி, கபடி, டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற ஆட்டங்களில் இந்திய ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுபவை கவனம் பெற்று விடுகின்றன. 2025 ஆம் ஆண்டில் கோகோ விளையாட்டில் ஆண், பெண் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றன. இது பெருமளவில் கவனம் பெறாமல் போய்விட்டது என்கிறார்கள் கோ-கோ ஆட்டக்காரர்கள்.

எட்டு மணிநேர வேலை

 சினிமாக்காரர்களுக்கும் எட்டு மணி நேர வேலை என்றிருக்க வேண்டும். அப்போதுதான் வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் கவனிக்க முடியும். மனரீதியான தாக்கத்தை சமாளிக்கலாம். நீண்ட காலமாக பல ஆண் நடிகர்கள் எட்டு மணி நேரம்தான் வேலை பார்க்கிறார்கள்.   - முன்னணி நடிகை தீபிகா படுகோனே