விரைவில் வாட்ஸ்அப் கணக்கு இல்லாமல் சாட் செய்யும் அம்சம்!
வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்கள் கூட சாட் செய்யும் வகை யில் கெஸ்ட் சாட் (Guest Chat) என்னும் புதிய அம் சத்தை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. WABetaInfo-இல் வெளியான அறிக்கையின் படி, இந்த Guest Chat அம்சம், சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.25.22.13 இல் கிடைக் கிறது. பயனர்கள், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத் தாதவர்களுடன் சாட் செய்வதற்காக ஒரு லிங்க்கை எஸ்.எம்.எஸ், இ-மெயில் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பி உரையாடல்களைத் தொடங்க முடியும். இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்யாமலே சாட் செய்ய முடியும். உரையாடல்கள் அனைத்து end-to-end encryption செய்யப்படுவதால் வேறு யாரும் இதனை அணுக முடியாது. மேலும், இதில் புகைப்படம், வீடியோ அல்லது வாய்ஸ் நோட் ஆகியவற்றை அனுப்ப முடியாது. இந்த அம்சம் தற்போது சோதனை நிலையில் உள்ள தால், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் சாதனங்கள் ஹேக் செய்யப்படும் அபாயம்!
இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப் பிள் பொருட்க ளும் ஹேக் செப் யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரிக்கை விடுத்துள் ளது. ஆப்பிளின் iOS, iPadOS, macOS, watchOS, tvOS மற்றும் visionOS போன்ற முக்கிய தளங்களில் பாதிப்பு கள் குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, iPad – iPadOS 17.7.9 மற்றும் 18.6 க்கு முன் வெளியான பதிப்புகள், Mac – macOS Sequoia 15.6, Sonoma 14.7.7, அல்லது Ventura 13.7.7 க்கு முன் வெளியான பதிப்புகள், Apple Watch – watch OS 11.6 க்கு முன் வெளியான பதிப்புகள், Apple TV மற்றும் Vision Pro – tvOS 18.6 மற்றும் visionOS 2.6 க்கு முன் வெளியான பதிப்புகள் ஆகிய சாதனங்களில் பாது காப்பு குறைபாடு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வழியாக, ஹேக் கர்கள் சாதனங்களை தாங்கள் கட்டுப்படுத்தவும், தக வல்களை திருடவும் முடியும். இதனால் ஆப்பிள் பாது காப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர் களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யூடியூப்-இல் வயது மதிப்பீடு செய்யும் புதிய ஏஐ அம்சம்!
18 வயதுக்குட்பட்ட பயனர்களை அடையாளம் காணும் வகையில், வயது மதிப்பீடு செய்யும் புதிய ஏஐ அம்சத்தை யூடியூப் அறிமுகப்படுத்த உள்ளது. அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 13 முதல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) அடிப்படையிலான இந்த வயது மதிப்பீட்டு அம்சம் செயல்படுத்தப்படும். 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் தவறான பிறந்த தேதிகளை வழங்கி யூடியூப் கணக்கைப் பயன்படுத்தி வருவதை கண்டறிவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்கு 18 வயதுக்குட்பட்டவருக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டால், அந்தக் கணக்கில் யூடியூப் பல கட்டுப்பாடுகளை விதிக்கும். அதன்படி: தனிப்பயனாக்கப்பட்ட (Personalised) விளம்பரங்கள் முடக்கப்படும். படுக்கை நேர நினைவூட்டல்கள் (Bedtime Reminders) மற்றும் திரை நேர கண்காணிப்பு (Screen Time Monitoring) போன்ற டிஜிட்டல் நல்வாழ்வு அம்சங்கள் இயக்கப்படும். சில குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் குறைவாகவே காட்டப்படும். இந்த அம்சம் முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகி, பின்னர் பிற நாடுகளிலும் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.