tamilnadu

img

காசாவில் நடப்பது இனப்படுகொலையே!

காசாவில் நடப்பது இனப்படுகொலையே!

ஐ.நா. விசாரணை ஆணையம் அறிவிப்பு!

நியூயார்க், செப். 16 - “காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை தான்”, என்றும்; “அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரி களின் தூண்டுதலினால் தான் இனப் படுகொலை நடக்கிறது” என்றும்; ஐ.நா.  விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று காசா வின் மீது இஸ்ரேல் அதிகாரப்பூர்வ மாக போரைத் துவங்கியது. அதன் பிறகு, கடந்த 22 மாதத்தில் 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள மக்களை திட்டமிட்ட பட்டி னியில் தள்ளியும் இஸ்ரேல் கொடூர மாக இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது.  காசாவில் ஒவ்வொரு நாளும் மூன்றில் ஒரு குழந்தையும், ஒவ்வொரு  10,000 பேரில் 2 பேரும் பசி காரண மாகவும், ஊட்டச்சத்து குறைபாடு கார ணமாகவும் பலியாகி வருகின்றனர்.  இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுயாதீனமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையைத் தற்போது தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து ள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வ தேச சட்டத்தின் கீழ் இனப்படு கொலை என வரையறுக்கப்பட்ட 5  சம்பவங்களில் 4 சம்பவங்கள் காசா வில் நடந்துள்ளன; எனவும், அதன் அடிப்படையில் இனப்படுகொலை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒரு குழுவின் உறுப் பினர்களை படுகொலை செய்வது,  உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான பாதிப்புகளை உருவாக்குவது. ஒரு சமூகத்தையே அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை உருவாக்குவது, குழந்தைப் பிறப்புகளைத் தடுப்பது  ஆகியவை காசாவில் நடத்தப் பட்டுள்ளது என அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  மேலும், இஸ்ரேல் அமைச்சர்கள் பிரதமர் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள், ராணுவத்தின் நடவடி க்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோ ருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்கா ணல்கள், ஆவணங்கள், போர் துவங்கி யதில் இருந்து தொகுக்கப்பட்ட செய ற்கைக்கோள் படபகுப்பாய்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்த குற்றச்சாட்டு நிரூ பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.