போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டங்கள் தீவிரமாகும்
அ.சவுந்தரராசன் பேட்டி
அ.சவுந்தரராசன் பேட்டி விருதுநகர், செப்.19 - தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலா ளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரமாகும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் 33 ஆவது நாளாக நடை பெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை வெள்ளியன்று துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசிடம் நாங்கள் வைப்பது கோரிக்கை அல்ல; அது மிக மிகச் சாதார ணமானது. தொழிலாளர்களுக்கு தர வேண்டிய பணத்தை 25 மாதங்கள் கழித்து, 9 வருடங்கள் கழித்து கேட்கிற போது கொடுக்க முடியாது என அரசு சொல்லுமா னால், அது மிகப்பெரிய அநீதி” என்றார். “24 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற வர்கள் மற்றும் தற்போது வரை ஓய்வு பெறு வோர்களை வெறுங்கையோடு போக்கு வரத்துக் கழகங்கள் அனுப்புகின்றன. அவர் களுடைய பணம் சுமார் ரூ.40 லட்சம். 30 ஆண்டுகளாக சேமித்த பணம் நிறுவனத்தின் கையில், அரசின் கையில் உள்ளது. இந்தத் தீபாவளியையாவது ஓய்வு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட அப்பணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். “ஓய்வூதிய பலன்கள் 9 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு, நீதிமன்றம் தீர்ப்ப ளித்த பின்பும் வழங்கவில்லை. ஓய்வு பெற் றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கொடுங்கள் எனவும், அதை மாதந்தோறும் பென்சன் தொகையில் பிடித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியும் செய்ய மறுக்கின்றனர்” என்றார். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் 12 மாத நிலுவைத் தொகையை வழங்கா மல், இந்த ஆண்டு மட்டும் ரூ.500 கோடி உழைத்த பணம் தொழிலாளர்களுக்கு இழப்பாகியுள்ளது என்று தெரிவித்த அவர், “அமைச்சரை கடைசியாக சந்தித்த போது, தீபாவளிக்கு முன்பு தருகிறோம் என அறிக்கை விடுங்கள் எனக் கூறினோம். இன்று வரை அறிவிப்பு வரவில்லை” என்றார். “இந்த ஆட்சியில் 4 வருடங்களாக மிகுந்த பொறுமையுடன் இருந்தோம். அதை யெல்லாம் மதிக்கவில்லை. எனவே போராட் டத்தை நாங்கள் தொடர்வோம். இது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும்” என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மண்டல பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலா ளர் பி.என்.தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.