அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச்-1பி (H1B) விசாவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் இதுவரை ரூ.1 லட்சத்து 32 ஆயிரமாக இருந்தது. இந்த சூழலில், எச்-1பி (H1B) விசாவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். செப்.21 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா வழங்கிய மொத்த எச்1பி விசாக்களில், 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சீனா நாட்டினர் 11.7 சதவிகிதம் பேருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது.
தற்போது எச்1பி விசா கட்டண அதிகரிப்பால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகப் போவது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.