world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காசா செல்லும்  கப்பல்களுக்கு பாதுகாப்பு 

காசாவில் பாலஸ்தீனர்களுக்காக நிவாரணப்பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்களுக்கு இத்தாலி மற்றும் ஸ்பெயின் பாதுகாப்பு தருவதாக கூறி யுள்ளன.  50 கப்பல்கள் அடங்கிய குளோபல் சுமூத் ஃப்ளோட்டில்லா கப்பல் குழு கிரீஸ் அருகே செல்லும் போது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்நிலையில் அக்குழுவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் பாது காப்புக்காக போர்க்கப்பலை நிறுத்துவதாக இத்தாலியும் ஸ்பெயினும் அறிவித்துள்ளன.

பாக். பிரதமர், தளபதியுடன்  டிரம்ப் 30 நிமிடம் பேச்சுவார்த்தை 

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் டிரம்ப் சந்தித்து 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இந்தியா - பாகிஸ்தான் மோ தலை நிறுத்தியதாக 40 க்கும் மேற்ப்பட்ட முறை கூறியுள்ள டிரம்ப் பாகிஸ்தானுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியா - பாக் மோதலுக்கு பிறகு பாகிஸ்தான் தளபதியை 2 முறைக்கு மேல் சந்தித்துள்ளார். ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தானுடன் அவர் அதிகம் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

‘பாதுகாப்பான, நம்பகமான செயற்கை  நுண்ணறிவை உருவாக்க வேண்டும்’

செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் குறித்த உரையாடல் ஐ.நா. அவையில்  நடத்தப்பட்டது. அதில் செயற்கை நுண்ணறிவு நம் உலகில் ஏற்கெனவே மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இம்மாற்றத்தை நாம் இணைந்து ஆள வேண்டுமா அல்லது அது நம்மை ஆள விட வேண்டுமா என்பதே இப்போதுள்ள கேள்வி என ஐநா அவை பொதுச் செயலாளர் குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வின் இலக்கு பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க உதவுவது என அறிவித்துள்ளார். 

பசுமை இல்ல வாயுக்களை  குறைக்க ஜி ஜின்பிங் உறுதி

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படு வதை குறைப்போம் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீனா தற்போது வெளியேற்றிவரும் பசுமை இல்ல வாயுவின்  உச்ச அளவிலிருந்து 7 முதல் 10 சதவீதம் வரை 2035 க்குள் குறைக்கத் திட்ட மிட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அதேநேரம் உலகளவில் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு எதிராகச் செயல்படும் சில மேற்குலக நாடு களை பெயர் குறிப்பிடாமல்  மறைமுகமாக விமர்சித்தார்.

ஜெர்மனிக்கு ஏவுகணை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்

நேட்டோ நாடான ஜெர்மனிக்கு 10,250 கோடி ரூபாய் மதிப்பிலான 400 நவீன ஏவுகணைகள் மற்றும் அதன் உப கரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லைக்குள் ரஷ்யாவின் டிரோன்கள் வந்த தாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேட்டோ நாடுகள் போருக்கு தயாராகும் வகையில்  ஆயுதக் கொள்முதலில் ஈடு பட்டுள்ளன.