tamilnadu

img

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

யிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   குத்தாலம் வட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர்  காதொலிக் கருவி கோரி மனுவையும், தரங்கம்பாடி வட்டம் வேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் மூன்று சக்கர நாற்காலி கோரிய மனுவையும், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நிலையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதனடிப்படையில், உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளி மகாலிங்கம் என்பவருக்கு ரூ.1,650 மதிப்புள்ள காதொலிக் கருவியையும், பயனாளி கரிகாலன் என்பவருக்கு ரூ.11,445 மதிப்புள்ள மூன்று சக்கர நாற்காலியையும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கினார்.