திருவண்ணாமலை, ஜூலை 10- திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டு நெசவுத் தொழிலை பாதுகாக்க கோரி ஆயி ரக்கணக்கான நெசவாளர்கள் திங்களன்று (ஜூலை 10) ஆரணியில் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரியமிக்க ஆரணி பட்டு சேலை உற்பத்தியில் பல ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் நெசவு செய்து வரு கின்றன. இதன் உப தொழிலாளிகள் சேர்ந்து சுமார், ஒரு லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கைத்தறி சட்டத்தை முறையாக கடை பிடிக்காததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு வட்டங்களில் விசைத்தறி யில் அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். இதனால், கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை யாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே லட்சக்கணக்கான நெசவாளர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் பட்டு கைத்தறி தொழிலை பாதுகாக்க, விசைத்தறி ரகங்கள் உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும்; சட்டத்தை மீறும் விசைத்தறி உரிமை யாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; விற்பனையாகாமல் தேங்கியுள்ள பட்டு சேலைகளை கோஆப்டெக்ஸ் மற்றும் ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற் பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டு சேலை நெசவாளர் கே.பி. பரமாத்மன் தலைமை தாங்கினார். சிஐடியு கைத்தறி சம்மே ளன பொதுச் செயலாளர் இ. முத்துக்குமார், ஆரணி பட்டு கைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் குருராஜாராவ், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. பாரி, மாவட்டத் துணைத் தலை வர் எம்.வீரபத்திரன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.சிவக்குமார், ஆரணி நிர்வாகிகள் சி. அப்பாசாமி, பெ.கண்ணன், காங்கேயன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகலநாதன், ப. செல்வன், எஸ் .ராமதாஸ், மாவட்ட நிர்வாகிகள் உதயகுமார், சிவாஜி, கே.கே. வெங்கடேசன், சங்கர், ரவி தாசன், குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆரணி கைத்தறி பட்டு உற்பத்தியாளர் மற்றும் நெசவாளர் கூட்ட மைப்பினர் கோட்டாட்சியர் ம. தனலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, “பட்டு கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என்றார். முன்னதாக, ஆரணி தர்மராஜா கோயில் மைதானத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.