tamilnadu

img

தேசம் காக்கப் போராடி வென்ற விவசாயிகளின் கரம் பற்றி நடப்போம்!

சேலம், டிச. 2 - விவசாயிகளின் எழுச்சி வெற்றி விழா மற்றும் பொதுத்துறை பாது காப்பு கருத்தரங்கம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சேலம் மாவட்டக்குழு சார்பில் பெரமனூர் பகுதியில் செவ்வாயன்று மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ் தலை மையில் நடைபெற்றது. முன்னதாக வடக்கு மாநகர செயலாளர் ஆர். குருபிரசன்னா வரவேற்புரையாற்றி னார். இதில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: நான் கேரளத்தில் பிறந்தவன், கேரளத்தில் இருந்து சேலத்திற்கு வருவது ஒரு இரவு கூட ஆகாது. ஆனால் எத்தனை வித்தியாசமான சூழல் உள்ளது. பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ளன. அது போன்று நாடு முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெவ் வேறான பழக்கங்களை, முறை களைப் பார்க்க முடியும், ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது தான் முக்கியமான அம்சம். வேற்றுமையில் ஒற்றுமை யுடன் இருப்பதைத் தான் ஆர்எஸ் எஸ்சும் பாஜகவும் சீர்குலைத்து வரு கின்றன. அரசியலமைப்பை இல்லா மல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமையுடன் உள்ள மக்களை திசைதிருப்பும் வேலையை ஆஸ்எஸ்எஸ் செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற தங்களது சூழ்ச்சித் திட்டத்தை அமல்படுத்த நினைக்கிறது ஆர்எஸ்எஸ். பல தரப்பட்ட மக்கள் வாழும் இந்தியா வில் அவர்களின் பண்பாடு கலாச் சாரத்தை சீர்குலைத்து ஆர்எஸ்எஸ் விரும்பும் பண்பாட்டை மக்களிடம் புகுத்த நினைக்கிறது.

“ஆர்எஸ்எஸ் சிந்தனை கொத்து கள்” என்ற நூல்தான், ஆர்எஸ்எஸ் - பாஜகவை வழி நடத்துகிறது; அந்த புத்தகத்தில் மூன்று எதிரி களைக் குறித்துள்ளனர்.  முஸ்லீம்கள், மிஷனரிகள், மார்க்சிஸ்டுகள் ஆகிய மூன்று எதிரிகள் மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் மார்க்சிஸ்டுகளை தங்களது எதிரிகள் என்று மக்கள் விரோதிகள் குறிப்பிடுவதை எண்ணி  நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒருவர் விரும்பிய மதத்தை வழி படவும், வழிபடாமல் இருக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை அரசியலமைப்புச் சட்டம் கொடுக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவிற்கு மதம் கிடையாது. ஆனால் இந்தி யாவில் உள்ளவர்கள் எந்த மதத்தை  வேண்டுமென்றாலும் வழிபடலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனை கொத்து புத்தகம் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான கருத்துக்களை கூறக்கூடியது. எனவேதான் ஆளும் பாஜகவினர் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றனர்.

எனவே, அரசியலமைப்பை பாது காக்கும் போராட்டம் என்பது மதச்சார்பின்மையை பாதுகாக்கும் போராட்டமாகும்.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவருகிறார்கள் பாஜகவினர். இதனால் இந்திய இளைஞர்களின் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஏர் இந்தியாவின் சொத்துக்கள் டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது பணம் சார்ந்த பிரச்சனை அல்ல, நமது  நாட்டின் பாரம்பரியம் அழிக்கப்படு கிறது. நமது நாட்டில் பட்டியலின - பிற்படுத்தப்பட்ட ஒருவர் படித்து முன்னேறிவரும் போது அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.  எல்ஐசி தனியாருக்கு விற்கப்பட்டால் அதில் உள்ள வேலை வாய்ப்புகள் பறிக்கப் படுகிறது என புரிந்துகொள்ள வேண்டும். 

மக்களால் மக்களுக்கானது என்பதுதான் மக்களாட்சியின் தத்து வம். ஆனால் 1991க்கு பின் கார்ப்ப ரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளுக்கு என மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான் கார்ப்பரேட் ஆதரவு அரசை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.  மகத்தான வெற்றியை நிலை நாட்டியுள்ள விவசாயிகளின் பாதை யில், மக்களுக்கான, இளைஞர் களுக்கான போராட்டங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும்.  இவ்வாறு அவர் பேசினார். பொதுத்துறை பாதுகாப்பு கருத்தரங்கத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா,  மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜீவா, மாவட்ட தலைவர் பி.கந்த சாமி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர். மாவட்ட பொருளாளர் வி. ஜெகநாயன் நன்றியுரையாற்றினார்.