ஒன்றிய அரசின் தொழிலாளர் நல விரோதச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம்!
சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழி லாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை களின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்தார்.
ஒன்றிய அரசு சட்டங்களுக்கு மறுப்பு
மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை தமிழ்நாடு அரசு அமலாக்கம் செய் யாது, நடைமுறைப்படுத்தாது” என்று திட்டவட்டமாக அறிவித்தார். “இதனால் ஒன்றிய அரசின் சட்டங் களால் தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை யும் வராமல் தொழிலாளர்களை முதல மைச்சர் பாதுகாத்துக் கொள்வார். நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப் படும்” என்று உறுதியளித்தார்.
சாம்சங் நிறுவனத்தில் தலையீடு
நாகைமாலி சாம்சங் நிறுவனத்தில் நடக்கும் தொழிற்சங்க எதிர்ப்பை குறிப்பிட்டபோது அமைச்சர் சி.வி.கணேசன் குறுக்கிட்டு: “சாம்சங் நிறுவனத்தில் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோ ருடன் நானும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை ஏற்படுத்தினோம். முதலமைச்சரின் உத்தரவுகளை ஏற்று சாம்சங் நிறு வனத்தில் சிஐடியு சங்கத்தை பதிவு செய்து கொடுத்திருக்கிறோம்” என்று விளக்கினார்.
தமிழக அரசின் சாதனைகள்
“தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த அரசு, 24 தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் மற்றும் மறு நிர்ணயம் செய்திருக்கிறது” என்று அமைச்சர் தெரிவித்தார். “மேலும், பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் அடிப்படை வசதி, ஓய்வறை, கழிப்பறை வசதி என பல் வேறு வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது. குறிப் பாக, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து, தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகமாக பணிபுரியும் உணவகங்கள், துணி கடைகள், வணிக நிறுவனங் கள், மளிகை கடைகள் என எந்த நிறு வனமாக இருந்தாலும் இருக்கையில் அமரும் வசதியை திமுக அரசு ஏற்ப டுத்தி கொடுத்திருக்கிறது” என்றார்.
தொழிலாளர்களுக்கு உறுதிமொழி
தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்படும் என்றும், தொழில் சட்டங் கள் முறையாக அமலாக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். “தமிழக அரசு தொழிலாளர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கும். ஒன்றிய அரசின் தொழிலா ளர் நலனுக்கு எதிரான எந்த நடவடிக் கையையும் எதிர்த்து நிற்போம்” என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் பதில் அளித்தார்.