மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு
மதுரை, ஆக.4- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தாங்கள் கண் பார்வையற்றவர்கள் என்ற மருத்துவச் சான்றிதழும், தேர்வு எழுது வதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீட்டுக்கான சான்றிதழும் பெறுவதற்காக திங்களன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யில் உள்ள கண் சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு உரிய பதிலை கூறாமல் அங்கிருந்த மருத்து வத்துறை ஊழியர்கள் அலைக் கழித்துள்ளனர். இதுகுறித்து விபரம் வருமாறு: குரூப் 2 தேர்வு மாற்றுத்திறனாளிகள் எழுதுவதற்கான சான்றிதழ் பெறு வதற்கு வந்துள்ளோம். நாங்கள் 6 பேர் கண் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் தாங்கள் கூடுதல் நேரம் தேர்வு எழுதுவதற்கான நேர ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் பெறுவதற்காக வந்துள் ளோம். காலை 9 மணிக்கு மருத்துவ மனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவு வளாகத்திற்கு வந்தோம். இங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டால் காத்திருங்கள் என்று கூறினர். நீண்டநேரம் ஆகியும் யாரும் வர வில்லை. அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் கேட்டபோது, மருத்துவர்கள் யாரும் வரவில்லை. நீங்கள் புதன்கிழமை வாருங்கள் என்று கூறுகிறார்கள். காலையிலேயே வந்து விட்டோம். எங்களுக்கு இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. காலை 10 மணிக்கு உள்ளே வந்தவர்கள், தற்போது 1 மணி ஆகிவிட்டது. சாப்பிடா மல் கூட இங்கு காத்துக் கொண்டி ருக்கிறோம். இங்குள்ள ஊழியர்களி டம் கேட்டால் காத்திருங்கள் என்று கூறுகிறார்கள் அல்லது புதன்கிழமை வாருங்கள் என்று கூறுகிறார்கள். குரூப் 4 தேர்வின் போதும், இதே போல் தான் அலைக்கழித்தனர். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இதில் நேரடியாக தலையிட்டு மாற்றுத்திற னாளிகள் தேர்வு எழுதுவதற்கான உரிய சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை கள் பாதுகாப்போர் சங்க நிர்வாகி மாவட்டத் தலைவர் என்.பாரதி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு தேர்வின் போதும் அரசு ராஜாஜி மருத்துவ மனை மருத்துவப் பிரிவு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளை மன உளைச்ச லுக்கு ஆட்படுத்திக் கொண்டே உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே போல் மாற்றுத்திற னாளிகள் சான்று பெறுவதற்கு அலைக்கழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதேநிலை தொடர்வதை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசின் சுகாதார துறையும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதற்கு நடைமுறையை எளிமைப்படுத்த, விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளர் ஆ.பால முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.