tamilnadu

விருதுநகர் மற்றும் தேனி முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்து நடத்துனரை  தாக்கியவர் கைது  

விருதுநகர், ஜூன் 2-விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே அரசுப்பேருந்தில் நடத்துனரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கூனங்குளம் நோக்கி அரசுப் பேருந்து சென்று  கொண்டிருந்தது. அதில், கூனங்குளத்தைச் சேர்ந்த மணிசங்கர் (25) என்பவர் பயணித்துள்ளார். அவரிடம் பயணச் சீட்டு வாங்குமாறு நடத்துனர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். அப்போது, நடத்துனரிடம் மணிசங்கர் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து சுந்தர்ராஜ், இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணி சங்கரை கைது செய்தனர்.

வாகனம் மோதி மூதாட்டி சாவு

தேனி, ஜூன் 1-போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு, சரக்கு வாகனம்மோதி மூதாட்டி இறந்தார்.போடி அருகே மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி (61). போடி-தேவாரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின் பக்கமாக அதிக வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அன்னலட்சுமிமீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமிசம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து அன்னலட்சுமியின் மகன் கருப்பசாமி (41) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தேவாரத்தை சேர்ந்த ஓட்டுநர்  பாண்டித்துரை (23) என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

20 பவுன் நகை திருட்டு 

தேனி, ஜூன் 2-பெரியகுளம் அருகே முருகமலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி நாகலட்சுமி (30).இவர் தற்போதுகணவருடன் கோவையில் வசித்து வருகிறார் .முருகமலையில் கோவில் திருவிழாவிற்கு வந்த நாகலட்சுமி ,கோவைக்குசெல்வதற்கு பெரியகுளம் அருகே அரசு பணிமனை அருகேஉள்ள பேருந்து நிறுத்ததில் கோவை செல்லும் பேருந்தில்ஏறியுள்ளார். .அப்போது 3 பெண்கள் இவரை இடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவதும் ,இறங்குவதுமாக இருத்துள்ளனர் .அப்போது பையை பார்த்த போது அதில் இருந்த செயின், மலை உள்ளிட்ட 20 பவுன் நகைகள் திருடு போனது.இது குறித்து நாகலட்சுமி பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.