tamilnadu

img

நிக்கோலஸ் மதுரோவை மீட்க ஆணையம் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி அறிவிப்பு

நிக்கோலஸ் மதுரோவை மீட்க ஆணையம் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி அறிவிப்பு

காரகஸ், ஜன. 5 -   அமெரிக்க அரசுடன் “சமமான மற்றும் மரியாதைக்குரிய” உறவையே மேற்கொள்ள விரும்புகிறோம் என்று வெனிசுலாவின் இடைக்கால ஜனாதி பதி டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். “ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை மீட்பதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ராணுவமானது, சர்வ தேசச் சட்டங்களை மீறி வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு ஜனாதி பதி மதுரோ மற்றும் அவரது மனைவி யைக் கடத்தியது. அமெரிக்காவின் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால ஜனாதிபதி  ரோட்ரிக்ஸ், “டிரம்ப் அவர்களே, எங்கள் மக்களும், இந்த பிராந்தியமும் அமைதியையும் பேச்சு வார்த்தையையும் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்; போரை அல்ல. இதுதான் ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவின் நிலைப்பாடாகவும் இருந்தது, இப்போது ஒட்டுமொத்த வெனி சுலாவின் விருப்பமும் இதுதான். வெனி சுலா எப்போதும் அமைதியையும், சக நாடுகளுடன் இணக்கமாக வாழ்வதை யுமே விரும்புகிறது. வெளிநாட்டு அச்சு றுத்தல்கள் இல்லாத, சர்வதேச ஒத்து ழைப்புடன் கூடிய சூழலில் வாழவே எங்கள் நாடு ஆசைப்படுகிறது.  ஒவ்வொரு நாட்டின் அமைதியை உறுதி செய்வதன் மூலமே உலக அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ‘சமமான மற்றும் மரியாதைக்குரிய’ உறவை மேற்கொள்ள விரும்பு கிறோம். மற்ற நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிடாத, அந்நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் கொள்கைகளின் அடிப்ப டையில் இந்த உறவு அமைய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல, வெனிசுலா வெளி யுறவு அமைச்சர் இவான் கில் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் மது ரோவையும் அவரது மனைவியையும் விடுவிப்பதற்கான ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.