tamilnadu

img

தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!

சென்னை,ஜன.15-  இஸ்ரோவின் தலைவராக தமிழ கத்தைச் சேர்ந்த வி. நாராயணன் பொறுப்பேற்றார்.  இஸ்ரோவின் 10- ஆவது தலைவராக இருந்து வந்த  சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வா ய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் படித்து, 1984-இல் இஸ்ரோ வில் பணியைத் தொடங்கிய இவர், இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குநராகவும், இந்தியாவின் லட்சிய மனித விண்வெளிப் பயணப் பயணமான ககன்யான் திட்டத்திற் கான தேசிய அளவிலான சான்றிதழ் வா ரியத்தின் தலைவராகவும் முக்கியப் பங்கு வகித்தார்.  இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1 உள்ளிட்ட திட்டங் களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர், இஸ்ரோ தலைவர் பதவியுடன், ஒன்றிய அரசின் விண்வெளித்துறை செயலாளராகவும் பதவி வகிப்பார். நாராயணன் 2 ஆண்டுகளில் இந்தப் பதவிகளில் இருப்பார்.