உமர் காலித்தின் உறுதியும் பிரகாஷ் ராஜின் துடிப்பும் - சு.வெங்கடேசன் எம்.பி
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு பொது நிகழ்வில் பங் கேற்க வேண்டுமென திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர் களை தொலைபேசியில்அழைத் தேன். “உங்கள் கட்சி மாநாட்டு க்கு என்னை ஏன் அழைக்கிறீர் கள்?” எனக்கேட்டார். “சமூகத்திலும், வரலாற்றி லும் கலைஞனின் இடம் நிரந்தர எதிர்கட்சி தான். எனவே நீங்க ளும், நானும் ஒரே இடத்தில், ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். வாருங் கள்” என்றேன். அவருக்கே உரித் தான அதிர்ந்த சிரிப்போடு வர சம்மதித்தார். ஓரிரு நாட்கள் கழித்து தோ ழர்கள் அவரின் பயண ஏற்பாட்டி னை கேட்ட பொழுது “படப் பிடிப்பு ஒன்றிற்காக தில்லியில் இருக்கிறேன். அங்கிருந்து மதுரை வந்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே ஏப்ரல் 4 தேதி தில்லியிலிருந்து மதுரை வந்தார். நான் அவரை ஹோட்டலில் வரவேற்பறையில் சந்தித்து “ பயணம் நல்ல படி யாக இருந்ததா?” என்று கேட்டு முடியவில்லை; “நான் உமர் காலித்தின் தந்தையை சந்தித் தேன்” என்று பேச்சைத் துவக்கி னார். கொப்பளித்த கண்களில் அப்படியொரு ஆவேசம்; உமர் காலித் நடத்தும் சமரச மற்ற போர்; உமரின் தந்தையின் துணிவு, நண்பர்களின் உறுதி; இருபது நிமிடம் ஒதுக்க முடி யாத நீதிமன்றம் - என ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தார். திகார் சிறையில் சுட்டெரிக்கும் தில்லி வெயிலின் வெப்பத்தை அப்படியே ஏந்தி வந்திருந்தார். வரவேற்பறையிலே சுமார் நாற்பது நிமிடம் நின்று பேசிக் கொண்டே இருந்தோம். இந்தத் தேசத்தின் ஒற்று மைக்காய் போராடினான் என்கிற ஒரே காரணத்திற்காக உமர் காலித் எனும் இளைஞன் 5 ஆண்டுகளாக பிணைகூட வழங்கப்படாமல் திகார் சிறை யில் அடைக்கப்பட்டிருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்.
போராளிகளின் உள்ள உறுதியையும், அவர்களின் குடும்பங்களின் நிம்மதியையும் இழக்கச் செய்து போராட்டக் களத்தில் அவர்களின் குரலை நிர்மூலமாக்குவதே பாசிச சக்திகளின் நோக்கம். அதை இந்த தேசம் முழுவ தும் உள்ள போராளிகளுக்கு எதி ராக அவர்கள் பயன்படுத்துகி றார்கள். இணைய வழியில், வழக்குகளில், நேரடித் தாக்கு தல்களில் என எல்லா விதத்தி லும் போராட்டங்களை பல வீனப்படுத்துவதே பாசிஸ்டுக ளின் குறிக்கோள். மதத்தின் அடிப்படையி லான வெறுப்பை விதைக்கும் பாசிஸ்டுகளின் தேசவிரோத செயலுக்கு எதிரான உமரின் போராட்ட உறுதியையும் சிறை யில் வாடும் அவரின் நண்பர் அமர் குறித்தும் இடைவிடாது பகிர்ந்து கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்ட தால் தமுக்கம் மைதானம் நோக்கி புறப்பட்டோம். ஆனால் திடீரென பெய்த பெரு மழை யின் காரணமாக அன்றைய பொது நிகழ்வு ரத்து செய்யப்பட்டு அவர் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையிலும், நிகழ்வின் பங்கேற்பாளர் என்ற முறை யிலும் எத்தனையோ முறை நிகழ்வுகள் கடைசி நேரத்தில் ரத்தாகியிருக்கிறது. அவை யெல்லாம் வருத்தத்தையும் கவலையையும் உண்டாக்கும். ஆனால் அன்றைய நிகழ்வு இரத்தானதை துளிகூட ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித் தோம். அன்றைய மேடை உமர் காலித்துக்கான மேடையாக அமைந்திருக்க வேண்டியது. பகத்சிங்கின் மரபை தூக்கிப் பிடிக்கும் உமர்காலித்தின் குர லையும், வக்பு திருத்தச் சட் டத்திற்கு எதிரான போராட்டத் தில் பங்கேற்றுத் திரும்பிய உமரின் தந்தையின் அரசியல் உறுதி குறித்தும் பிரகாஷ் ராஜின் பேச்சை இந்த தேசமே கேட்டிருக்க வேண்டிய ஒரு மேடை. அவர் பேசியிருந்தால் தேசம் முழுவதும் வலது சாரி ஊடகங்கள் அடுத்து பல நாட் கள் அலறிக் கொண்டிருந்தி ருக்கும். ஏனெனில், பாசிஸ்டுக ளின் கோரப்பற்களை பிடுங் கும் உறுதிமிக்க சொற்கள் அவரி டம் உண்டு. அவர்கள் வலி தாங்காமல் துடித்திருப்பார்கள்.
உண்மை தன் இயல்பிலேயே மனிதர்களின் இதயத்துக்குள் கொண்டு போய் செய்தியை சேர்க்கும் வலிமை கொண்டது. தேசவிரோதிகளுக்கு எதிராக உமரின் போராட்டத்தை கோடிக்கணக்கான மக்களின் இதயத்துக்குள் கொண்டு சேர்க்கும் வலிமையும், ஆவேச மும் கொண்ட ஒரு கலைஞ னின் உரை, தமுக்கம் மைதா னத்தில் நிகழாமல் போய் விட்டதே என்ற துக்கம் இப்பொழுது வரை நீடிக்கிறது. ஆனால் ஆறுதலான ஒன்று நடந்தேறியுள்ளது. பிரகாஷ் ராஜ் உமரின் தந்தையை சந்தி த்த நிகழ்வு குறித்து ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். தீக்கதிர் அதை தமிழில் வெளியிட்டுள்ளது. எங்கும் பதிவாகாமல் போய் விட்டதே என்ற பெருங்கவலை சற்றே அகன்றது. அந்தக் கலை ஞனின் சிந்தனையும் ஆவேச மும் பொது வெளியில் பதிவாகி யது மிகுந்த மகிழ்வளிக்கிறது. “இறந்த மீன் ஆற்றின் போக்கில் பயணிக்கும். நீரோட் டத்தினை எதிர்த்து முன்னேற மீன்களுக்கு உயிர் வேண்டும். நாம் உயிரோடிருக்கிறோம் என்பதற்கு நமது போராட்டம் தான் சான்று.” உமர்.. பெயரல்ல, போராட் டத்தின் இன்னொரு சொல்.