tamilnadu

img

லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியர் உள்ளிட்ட
 இரண்டு பேருக்கு சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிதம்பரம் வட்டம் சிவபுரி, வடபாதி தெருவை சேர்ந்த ஆர்.ஆசைதம்பி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கூரை வீடுகட்டி குடியிருந்து வந்ததாக வும், பின்பு அதே இடத்தில் மாடிவீடு கட்டி குடியிருந்து வந்ததாகவும், அந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெற தடை யில்லா சான்று வழங்குவதற்கு சிதம்பரம் தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) கே.அசோகன்  ரூ.2500 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆசைதம்பி  கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படை யில் அசோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொறிவைப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது கே.அசோகன் என்பவரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் கே.முனுசாமி ரூ.2500 லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை  கடலூர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி முன்பு நடைபெற்றது. வழக்கின் விசா ரணை முடிவடைந்து புதன்கிழமை  நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் கே.அசோகன் மற்றும் ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் ஆர்.முனு சாமி ஆகியோர் குற்றவாளி எனவும், அசோகன் என்பவருக்கு இரண்டு பிரிவு களில் தலா இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி கே.முனுசாமிக்கு ஒரு வருடம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும், தலா ஐந்தா யிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனையை அனு பவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.