வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த டிரம்ப்
தில்லி சட்டமன்றத் தேர்தல் முடிந் ்தவுடன் பிரதமர் மோடி பிப்ர வரி 12ஆம் தேதி அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்து இந்தி யா - அமெரிக்கா இடையே வர்த்த கம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் ஒத்துழைப்பு என பல முக்கிய ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திட்டார்.
மோடி அமெரிக்க சுற்றுப்பய ணத்தை நிறைவு செய்து பிப்ரவரி 14ஆம் தேதியே இந்தியா திரும்பி விட்டார். ஆனால் தற்போது தான் அமெரிக்காவில் நிகழ்ந்த சில முக்கிய விஷயங்கள் ஒவ்வொன் றாக வெளி வருகின்றன. கடந்த வாரம் பிரதமர் மோடி பத்திரிகை யாளர் சந்திப்பில் தனது நண்பர் அதானி தொடர்பான கேள்விக்கு திணறியது, ஆங்கிலம் தெரியா மல் மொழிபெயர்ப்பாளர் உதவியு டன் ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் வீடியோ ஆதாரத்து டன் வெளியாகின. இந்நிலையில், இந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அழைக்க டிரம்ப் வராதது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின், ஒரு மாத காலத்தில் மோடி உட்பட 4 வெளிநாட்டு தலைவர்கள் அவரை வெள்ளை மாளிகையில் சந்தித்து உள்ளனர்.
மோடி அமெரிக்கா செல்வ தற்கு முன்பு ஜப்பான் பிரதமர் இஷிபா, ஜோர்டான் அரசர் இரண் டாம் அப்துல்லா, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உள்ளிட்ட 3 தலைவர்க ளும் டிரம்பை சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். இந்த மூன்று தலைவர்களையும் வெள்ளை மாளிகை வாசலில் வந்து டிரம்ப் வரவேற்றார். ஆனால் மோடி வெள்ளை மாளிகைக்கு வந்த போது அவரை வரவேற்க டிரம்ப் வரவில்லை. மாறாக வெள்ளை மாளிகை அதிகாரி அல்லது அமைச் சர் போன்ற ஒரு பெண் மோடியை வரவேற்றார். மற்ற தலைவர்களை வெள்ளை மாளிகை வாசலில் வந்து வரவேற்ற டிரம்ப், மோடி யை மட்டும் வரவேற்காதது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தேசிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.