tamilnadu

img

திருச்சி : மருங்காபுரி வட்டக்குழு ரூ.1.50 லட்சம் நிதியளிப்பு

திருச்சி : மருங்காபுரி வட்டக்குழு ரூ.1.50 லட்சம் நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை யொட்டி சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்ட மருங்காபுரி வட்டக்குழு சார்பில் திங்கள்கிழமை அன்று நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், தியாகராஜன் ஆகியோர் பேசினர்.  தொடர்ந்து மாநாட்டு நிதி ரூ.1.50 லட்சத்தை, மாநிலக் குழு உறுப்பினரும், சிபிஎம் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அழகர்சாமி, அண்ணாத்துரை, முருகேஷ், பொன்னன் வட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டக்குழு உறுப்பினர் கணேஷ் வரவேற்புரையாற்றினார். சின்னையா நன்றி கூறினார்.

புதிய மின் நிலையத்திற்கு உடன்குடி - திசையன்விளை சாலை வழியே மின் கம்பங்கள் அமைக்க கோரி வழக்கு

தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் ஸ்ரீராம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், உத்திரமாடன் குடியிருப்பு கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளை கடந்தே  உயர் மின்னழுத்த வயர்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்களை அழிக்கும் நிலை உள்ளது. இதற்கு பதிலாக உடன்குடி - திசையன்விளை சாலை வழியே கொண்டு சென்றால், மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும். ஆகவே படுகபத்து துணை மின் நிலையத்திற்கு உடன்குடி - திசையன்விளை  சாலை வழியாக உயர் மின்னழுத்த வயர்களை கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, “வழக்கு தொடர்பாக தமிழக மின்வாரிய தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.