ஓய்வுகால பலன்கள்; ஊதிய நிலுவை, அகவிலைப்படியை வழங்க அரசுக்குக் கோரிக்கை போக்குவரத்து ஊழியர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது
சென்னை, ஆக. 18 - அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் திங்களன்று, மாநிலம் முழுவதும் (ஆக.18) மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழி லாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்; பணி யில் உள்ளவர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவை, 12 மாத அகவிலைப்படி நிலுவை ஆகிய வற்றை வழங்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; 94 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தவணை முறையில் வழங்கு வதற்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோராமல், இதர துறைக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறு கிறது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு சங்கத் தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓய்வுபெற்றவர்களுக்கு 24 மாதங்களை கடந்தும் பணப்பயன்களை வழங்காமல் அரசு மவுனம் காப்பது சரியல்ல. ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 55 சதவிகித அகவிலைப்படியில், 32 சதவிகிதத்தை மட்டுமே அரசு வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள 23 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும். ஒப்பந்தப் பலன்களை அகவிலைப்படி, ஓய்வூ திய உயர்வாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காததால் ஓய்வூதியம் உயரவில்லை. குடும்ப ஓய்வூதியம் 7500 ரூபாய் என்று அரசு நிர்ணயித் துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் குடும்ப ஓய்வூதியம் 3500 ரூபாயாக உள்ளது. 1.4.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 ஆயிரம் பேர் வாரிசு வேலைக் காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக இல்லை. காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங், ஒப்பந்த ஊழியர், மின்சார பேருந்துகளை அரசு வாங்கி தனியாரை வைத்து இயக்குவது, பணிமனைகளை தனியாருக்கு கொடுப்பது என பல வழிகளில் போக்குவரத்துக் கழகம் தனியார்மயப் படுத்தப்படுகிறது. இதனை ஏற்க முடியாது. எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு அழைத்து பேச வேண்டும் அல்லது கோரிக்கைகளை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்” என்று கூறினார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயி னார், பொருளாளர் சசிக்குமார், சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலை வர்கள் டி. குருசாமி, ஆதிமூலம், குணசேகரன், சிஐடியு மாநிலச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செந்தில்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.