tamilnadu

img

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்

ராஞ்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு, விதிகளுக்கு எதிராக கூடுதல் நேரம் பணி வழங்குவதை் கண்டித்தும், அதற்கு மறுத்த என்ஜின் டிரைவர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் ராஞ்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் சார்பில் வியாழனன்று திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் தொழிலாளர் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார். உதவி தலைவர் ராஜா வரவேற்றுப் பேசினார்.  டி.ஆர்.இ.யு. உதவி தலைவர் சரவணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.