tamilnadu

img

திண்டுக்கல் சீவல்சரகு ஊராட்சியில் ரூ.50 கோடியில் டைடல் பார்க் அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் சீவல்சரகு ஊராட்சியில் ரூ.50 கோடியில் டைடல் பார்க்
அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிகாரிகள் ஆய்வு

ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைட்டல் பார்க் அமை கிறது. ரூ.50 கோடியில் டைடல் பார்க், ரூ.150 கோடியில் அமையவுள்ள தொழிலாளர் மருத்துவமனைக்கான இடங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய் தார் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியை சேர்ந்த  பல பொறியியல் மாணவர்கள் நலன் கருதி சீவல்சரகு  ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைடல் பார்க் (மென்பொருள் பூங்கா) அமையவுள்ளது. திங்க ளன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் ஆத்தூர்  வட்டாட்சியர் முத்துமுருகன் ஆகியோருடன் ரூ.50 கோடி  மதிப்பில் டைட்டல் பார்க் அமையவுள்ள இடத்தை பார்வை யிட்டார்.  பின்னர் அதனருகே ரூ.150 கோடி மதிப்பில் அமைய வுள்ள தொழிலாளர் மருத்துவமனை அமைய உள்ள  இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், ஆத்தூர் தொகுதியை சேர்ந்த  பல மாணவர்கள் பெங்களுர், சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகின்ற னர். ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொறியியல் படித்த மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சீவல்சரகு ஊராட்சி சுதனாகியபுரத்தில் 8 மாடி கட்டிடத்துடன் டைடல்பார்க் அமைகிறது. இது போல இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர் நலன்கருதி தொழிலாளர் நல மருத்துவமனை (இஎஸ்ஐ)அமைய வுள்ளது என்றார். ஆய்வின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பி னர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாறைப்  பட்டி ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், முன்னாள்  மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், அமைச்ச ரின் உரிமையாளர்கள் ஹரிஹரன், காமாட்சி, அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் அரசன் சண்முகம், மேற்கு  ஒன்றிய துணை செயலாளர்கள் கருத்தராஜா, கலா  பச்சை, அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரக்கல் காங்கே யன், அரசு ஒப்பந்தகாரர் மெல்வின், திண்டுக்கல் மாமன்ற  உறுப்பினர் நெல்லை சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்ட னர். ஒட்டன்சத்திரம் பேருந்துநிலையத்தில் ஒருவர் கொலை ஒட்டன்சத்திரம், மார்ச் 11- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யத்தில் நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் திங்களன்று  அதிகாலை வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து  கிடந்தார். அவர் அருகே செங்கல் கற்கள் கிடந்தன. மேலும்  அவர் செங்களால் அடித்து கொலை செய்யப்பட்ட தற்கான தடயங்களும் இருந்தன.  இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாரின் விசாரணை யில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் வேடபட்டி யைச் சேர்ந்த மாயாண்டி மகன் பாலாஜி (39) என தெரிய வந்தது. சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர்,  கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.