சென்னை,ஜன.15- தமிழக அரசு சார்பில் அறிவிக்கப் பட்ட விருதுகளை தமிழக முதல்வர் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரியார், அம்பேத்கர், காமராஜர், கலைஞர் உள்ளிட்டோர் பெயர்களில் 10 பேருக்கு விருதுகளை அறிவித்திருந்தார். அதன்படி, தலைமைச் செய லகத்தில் அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சுவாமிநாதன், மெய்ய நாதன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெரியார், அம்பேத்கர் விருது பெறு வோருக்கு தலா ரூபாய் 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப் பட்டது. மற்ற ஏனைய விருதுகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அம்பேத்கர் விருதை விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமா ருக்கு தமிழக முதல்வர் வழங்கி னார். தந்தை பெரியார் விருது விடு தலை ராஜேந்திரனுக்கு வழங்கப் பட்டது. கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்பட்டது. திரு வள்ளுவர் விருது புலவர் படிக்கராமுவுக்கு வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா விருது எல்.கணே சனுக்கு வழங்கப்பட்டது. மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபி லனுக்கு வழங்கப்பட்டது. திரு.வி.க விருது ஜி.ஆர்.ரவீந்திர நாத்துக்கு வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது பொன்.செல்வகணபதிக்கு வழங்கப்பட்டது. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவ நாதம் விருது வெ.மு.பொதியவெற் பனுக்கு வழங்கப்பட்டது.